News October 6, 2025
நீ பெரும் கலைஞன்..

கனடாவில் நடைபெற்ற அல்பெர்டா இந்திய திரைப்பட விழா 2025-ல், முதல்முறையாக ‘Golden Beaver Award’ என்ற விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் ஒருவரின் சாதனைகளையும், பங்களிப்பையும் கெளரவிக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருதை முதலில் பெற இவரை விட பெஸ்ட் சாய்ஸ் வேறொருவர் உண்டோ. பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் நடிகர் கமல்ஹாசன் இந்த விருதை பெற்றுள்ளார்.
Similar News
News October 6, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு முக்கிய தகவல்

தனியாக வசிக்கும் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசு விதிப்படி, அவர்களும் ₹1,000 பெற தகுதியானவர்களே. தனியாக வசிக்கிறேன் என குறைதீர் முகாமில் மனு கொடுத்து முதலில் ரேஷன் கார்டு பெற வேண்டும். இதனையடுத்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும். ஆவணங்களை சரிபார்த்த பிறகு அரசு பணம் வழங்கும். SHARE IT.
News October 6, 2025
அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு: அரசு பரிசீலனை

கரூர் துயரத்தின் எதிரொலியாக அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்க அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி அரசியல் கூட்டங்களில் பெண்களுக்கு தனி இடம், அரசியல் கூட்டத்தில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்க தடை, கூட்டத்திற்கு பின் குப்பைகளை கட்சியினரே அகற்ற வேண்டும், காலி இடங்களில் மட்டுமே அரசியல் கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News October 6, 2025
இது தெரியாம ஸ்மார்ட்போன் யூஸ் பண்ணாதீங்க!

பர்சனல் பொருளாகிவிட்ட போனை யாராவது ஒருவருக்கு யூஸ் பண்ண கொடுத்தால், அவர்கள் உங்க போனில் என்ன பண்ணாங்க என தெரிஞ்சிக்க இந்த சிம்பிள் ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க. போனின் டயல் பேடில் ‘*#*#4636#*#*’ என டைப் பண்ணுங்க. வரும் 3 ஆப்ஷன்களில் Usage Statistics-ஐ செலக்ட் பண்ணி, ‘Sort by last time used’ என்பதை கிளிக் செய்யுங்க. குறிப்பிட்ட APP-ஐ எவ்வளவு நேரம் யூஸ் பண்ணாங்க என்பது தெளிவாக வந்துவிடும். SHARE IT.