News October 6, 2025
பிஹாருக்கு இன்று தேர்தல் தேதி அறிவிப்பா?

பிஹார் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். பிஹாரில் கடும் போட்டி இருக்கும் 59 தொகுதிகளில் பெரும்பாலான பெண் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற காங்., புகார் குறித்து விளக்கமளிக்கும் தேர்தல் ஆணையர், தேர்தல் தேதியை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News October 6, 2025
அப்போலோவுக்கு சென்றார் முதல்வர் ஸ்டாலின்

தலைமைச் செயலகத்தில் இருந்து சென்னை அப்போலோ ஹாஸ்பிடலுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். அப்போலோவில் ஆஞ்சியோ செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அதன்பின் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
News October 6, 2025
வீட்டிலிருந்தபடியே வருமானம் வேண்டுமா? இதோ திட்டம்

வீட்டில் இருந்தபடியே மாதம் ₹9,000 வரை வருமானம் ஈட்ட வேண்டுமா? அதற்கு போஸ்ட் ஆபிஸின் மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். இதில், ₹1 லட்சம் – ₹15 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். ₹15 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹9,250 வருமானமாக கிடைக்கும். திட்டம் முதிர்ச்சியடைந்தவுடன் நீங்கள் செலுத்திய ₹15 லட்சம் உங்களுக்கு திருப்பிக்கொடுக்கப்படும். SHARE.
News October 6, 2025
தலைமை நீதிபதியை தாக்கியவர் வாக்குமூலம்

SC-யின் தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசி தாக்கமுயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை டெல்லி போலீஸ் கைது செய்தனர். அவரை விசாரித்தபோது, மத உணர்வுகளை பாதிக்கும் விதமாக CJI பேசியதால் தான் இப்படி செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். கஜுராஹோ கோயிலில் துண்டிக்கப்பட்ட விஷ்ணு சிலையின் தலையை மீண்டும் நிறுவக் கோரிய வழக்கில், ’கடவுளிடமே கேளுங்கள்’ என CJI சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.