News October 6, 2025
திமுகவை டிடிவி பாராட்டுவது பச்சை துரோகம்: RB உதயகுமார்

டிடிவி தினகரனை நம்பி சென்ற 18 MLA-க்கள் இன்று அரசியல் அநாதையாகிவிட்டனர் என Ex அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். உங்களின் தளபதியாக இருந்தவர்கள் இப்போது ஸ்டாலினுக்கு தளபதியாக மாறியது ஏன் என டிடிவியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜெயலலிதாவின் கொடியை வைத்துக் கொண்டு <<17919640>>திமுகவை பாராட்டுவது<<>> பச்சை துரோகம் என்றும் உதயகுமார் சாடியுள்ளார்.
Similar News
News October 6, 2025
CJI பி.ஆர்.கவாய் மீது தாக்குதல் முயற்சி ஏன்?

கஜுராஹோ கோயிலில் துண்டிக்கப்பட்ட விஷ்ணு சிலையின் தலையை மீண்டும் நிறுவ கோரிய மனு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது CJI பி.ஆர்.கவாய் தெரிவித்த கருத்து <<17750475>>சர்ச்சையானது<<>>. இதையடுத்து ‘நான் எல்லா மதங்களையும் சமமாக மதிக்கிறேன்’ என அவர் விளக்கம் அளித்தார். இன்று CJI பி.ஆர்.கவாய் மீதான <<17928342>>தாக்குதல் <<>>முயற்சிக்கு இது காரணமாக இருக்கலாம் கூறப்படுகிறது.
News October 6, 2025
சற்றுமுன்: கனமழை பொளந்து கட்டும்

தமிழ்நாட்டில் இன்று முதல் 10-ம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டை IMD விடுத்துள்ளது. இன்று நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதேபோல், நாளை நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
News October 6, 2025
மதுவில் தத்தளித்த ஊர்.. செஸ் ஊராக மாற்றிய டீக்கடைக்காரர்!

திருச்சூரின் மரோட்டிச்சல் கிராமம் ஒருகாலத்தில் குடிபோதையால் தத்தளித்து கொண்டிருந்தது. ஆனால் டீக்கடைக்காரர் உன்னிகிருஷ்ணன் என்பவரின் தொலைநோக்கு பார்வை ஊரை கரை சேர்த்தது. அவர் ஒரு சிறு முன்னெடுப்பாக ஒருவருக்கு செஸ் விளையாட சொல்லிக் கொடுக்க, ஊரே செஸ் விளையாட்டில் நாட்டம் கொண்டுள்ளது. 2018-ல் 1,600 பேர் ஒன்றாக விளையாடிய சாதனையும் படைத்த ஊர் இன்று செஸ் கிராமம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.