News October 6, 2025
பெற்றோர்கள் இந்த வாய்ப்பை மிஸ் செய்யாதீங்க

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது. rteadmission@tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக பள்ளிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. RTE அடிப்படையில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் முழுக் கல்விச் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும். பெற்றோர்கள் இந்த வாய்ப்பை மிஸ் செய்யாதீங்க.
Similar News
News October 6, 2025
BREAKING: தீபாவளி போனஸ் அறிவித்தார் CM ஸ்டாலின்

அனைத்து அரசு பொதுத்துறை சி, டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிரந்தர பணியாளர்கள் குறைந்தபட்சம் ₹8,400 முதல் அதிகபட்சம் ₹16,800 வரை போனஸாக பெறுவார்கள். போனஸ் வழங்க ஏதுவாக ₹376 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
News October 6, 2025
வள்ளலார் சர்வதேச மாநாடு நடத்த அரசு திட்டம்

சென்னையில் விரைவில் வள்ளலார் சர்வதேச மாநாடு நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மாநாட்டில் வள்ளலாருக்கு பெருமை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள 24 சன்மார்க்கிகளை சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் வள்ளலார் குறித்து நூல் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
News October 6, 2025
பைசன் தான் எனக்கு முதல் படம்: துருவ் விக்ரம்

மாரிசெல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பைசன் காளமாடன்’, தீபாவளிக்கு வெளியாகிறது. இதனிடையே தனது முதல் 2 படங்களையும் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, பைசனை மிஸ் பண்ணாதீங்க என ரசிகர்களிடம் துருவ் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த படத்திற்கு 100% உழைத்துள்ளதாகவும், இதுதான் உண்மையில் தனது முதல் படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் படம் ‘பைசன்’ எனவும் கூறியுள்ளார்.