News October 6, 2025
கடந்த ஒரு மாதத்தில்..

இந்திய பெண்கள் அணி, பாகிஸ்தானை 88 ரன்களை வீழ்த்தி ODI WC-ல் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாகிஸ்தானை 4 முறை இந்திய அணி வென்றுள்ளது. ஆசிய கோப்பையில் செப். 14 (7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி) செப். 21 (6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி), செப். 28 (5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி) என இந்திய ஆண்கள் அணி 3 வெற்றியை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 6, 2025
சற்றுமுன்: லெஜண்ட் காலமானார்

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திர வீரர் பெர்னார்ட் ஜூலியன் (75) காலமானார். 1975-ல் முதல் உலகக் கோப்பையை WI வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். ஆஸி., தெ. ஆப்., அணிகள் இவரை பார்த்தே அலறும். WI-க்காக 24 டெஸ்ட்களில் விளையாடி 866 ரன்கள் குவித்து 56 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், 12 ஒருநாள் போட்டிகளில், 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News October 6, 2025
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பொங்கலுக்கு வெளியாகாதா?

விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’ பொங்கலுக்கு வெளியாகும் என நம்பிக்கொண்டிருந்த வேளையில், கரூர் அசம்பாவிதம் படக்குழுவை கதிகலங்க செய்துள்ளது. இதன் தாக்கம் இன்னும் 3 மாதங்களுக்காவது இருக்கும் என்பதால் பட ரிலீஸை பொங்கல் ரிலீஸிலிருந்து தள்ளிவைக்கலாமா என்கிற குழப்பத்தில் இருக்கிறார்களாம். படத்தை வாங்கிய OTT நிறுவனமும் இதற்கு OK சொல்ல, விஜய் பதிலுக்காக படக்குழு காத்திருப்பதாக கூறப்படுகிறது.
News October 6, 2025
திராவிடம் செத்துவிட்டது: சீமான்

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்த்த திராவிட இயக்கத்தை சேர்ந்தவர் யார் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழின தலைவர்களின் மொழி புரட்சியை தங்களது லாபத்திற்காக திராவிடர்கள் பயன்படுத்தி கொண்டதாக குற்றம் சாட்டிய அவர், திராவிடம் செத்துவிட்டதாக விமர்சித்தார். மேலும், கடற்கரை எங்களுக்கு கடற்கரை தான்; எவருக்கும் கல்லறை இல்லை; தேர்தலில் NTK முன்னிலை என்ற உடனே தானாகவே கல்லறை இடிக்கப்படும் என்றார்.