News October 6, 2025

எந்த கிழமையில் எந்த கடவுளை வழிபட வேண்டும்?

image

கடவுளை வழிபட நேரம், காலம் இல்லை என்ற போதிலும், ஒரு சில நாள்கள் ஒவ்வொரு கடவுளுக்கு உகந்த தினமாகும். ஞாயிறன்று சூரிய பகவானை வழிபட வேண்டும். திங்களன்று சிவனையும், செவ்வாயில் முருகன், துர்கை அம்மன் வழிபாடுகளை செய்யலாம். புதனில் விஷ்ணு, விநாயகரையும், வியாழக்கிழமையில் தட்சணாமூர்த்தியை வணங்க வேண்டும். வெள்ளியில் மகாலட்சுமி வழிபாடும், சனிக்கிழமையில் அனுமன், பெருமாளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். SHARE.

Similar News

News October 6, 2025

திராவிடம் செத்துவிட்டது: சீமான்

image

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்த்த திராவிட இயக்கத்தை சேர்ந்தவர் யார் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழின தலைவர்களின் மொழி புரட்சியை தங்களது லாபத்திற்காக திராவிடர்கள் பயன்படுத்தி கொண்டதாக குற்றம் சாட்டிய அவர், திராவிடம் செத்துவிட்டதாக விமர்சித்தார். மேலும், கடற்கரை எங்களுக்கு கடற்கரை தான்; எவருக்கும் கல்லறை இல்லை; தேர்தலில் NTK முன்னிலை என்ற உடனே தானாகவே கல்லறை இடிக்கப்படும் என்றார்.

News October 6, 2025

BiggBoss : 20 போட்டியாளர்களின் விவரம்

image

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியுள்ளது. இம்முறையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிலையில் அரோரா சின்கிளேர், ரீல்ஸ் திவாகர், FJ, பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, பிரவீன், சுபிக்‌ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் என 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றுள்ளனர். 105 நாள்கள் நிகழ்ச்சி நடக்கும்.

News October 6, 2025

இத பண்ணலன்னா உங்க License-க்கு பிரச்னையா?

image

உங்கள் லைசன்ஸ் மற்றும் RC-யில் இணைக்கப்பட்டுள்ள போன் நம்பரை அப்டேட் பண்ணிட்டீங்களா? இல்லையெனில், உடனடியாக செய்யும்படி சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இன்சூரன்ஸ் முடிவு, சாலை வரி, போக்குவரத்து அபராதம் போன்ற SMS-கள் வரும் என்பதால் சரியான போன் நம்பர் இருப்பது அவசியமாகிறது. லைசன்சில் போன் நம்பரை மாற்றுவது எப்படி என்பதை தெரிந்துகொள்ள <<17926341>>க்ளிக் பண்ணுங்க<<>>.

error: Content is protected !!