News October 6, 2025
திமுக அரசுக்கு பக்கவாத்தியம் வாசிக்காதீங்க: EPS

கரூர் துயரத்தில் திமுக அரசுக்கு பக்கவாத்தியம் வாசிப்பதை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும் என EPS விமர்சித்துள்ளார். In Karur Where there was no way out என்ற செய்தியை X-ல் சுட்டிக்காட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு செய்ய தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இவ்விஷயத்தில் குளறுபடி செய்த அரசின் நடவடிக்கைகளை, ஒரு நபர் விசாரணைக்கு குழு முழுமையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 6, 2025
இத பண்ணலன்னா உங்க License-க்கு பிரச்னையா?

உங்கள் லைசன்ஸ் மற்றும் RC-யில் இணைக்கப்பட்டுள்ள போன் நம்பரை அப்டேட் பண்ணிட்டீங்களா? இல்லையெனில், உடனடியாக செய்யும்படி சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இன்சூரன்ஸ் முடிவு, சாலை வரி, போக்குவரத்து அபராதம் போன்ற SMS-கள் வரும் என்பதால் சரியான போன் நம்பர் இருப்பது அவசியமாகிறது. லைசன்சில் போன் நம்பரை மாற்றுவது எப்படி என்பதை தெரிந்துகொள்ள <<17926341>>க்ளிக் பண்ணுங்க<<>>.
News October 6, 2025
BREAKING: தொலைபேசி மூலம் பேசினார் விஜய்

கரூரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட தவெக மாவட்டச் செயலாளர்களிடம் விஜய் தொலைபேசி மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பது குறித்த கருத்துக்களை அவர் கேட்டறிந்துள்ளார். மேலும், பிரச்னைகள் அனைத்தும் சரியாகிவிடும் என நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்த அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவவும், சர்ச்சையான பதிவுகளை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
News October 6, 2025
சிலையை சேதப்படுத்தி MGR புகழை அழிக்க முடியாது:EPS

மதுரை அவனியாபுரத்தில் MGR சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு EPS கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுவதாகவும் கூறியுள்ளார். அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.