News October 6, 2025
கைது நடவடிக்கைக்கு தயாராகும் விஜய்

கரூர் சம்பவத்தில், விஜய் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் என மெட்ராஸ் HC கேள்வி எழுப்பிய நிலையில், கைது நடவடிக்கையை எதிர்கொள்ள அவர் தயாராக உள்ளாராம். N.ஆனந்த், நிர்மல்குமாருக்கு மேல்முறையீட்டில் சாதகமான முடிவு வராத பட்சத்தில் டிஜிபி ஆபீசை முற்றுகையிட்டு, தன்னையும் கைது செய்யுங்கள் என்று முறையிட விஜய் திட்டமிட்டுள்ளாராம்.
Similar News
News December 7, 2025
ராமநாதபுரம்: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க இங்கு <
News December 7, 2025
நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை(டிச.8) காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்துள்ளார். இதனிடையே, மாவட்டத்தின் முக்கியமான கோயில் திருவிழா என்பதால் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
News December 7, 2025
நடுக்கடலில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி!

கிரேக்கத்தின் கிரீட் தீவு அருகே, புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலியாகினர். 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருந்து மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய பயன்படுத்தப்படும் முக்கிய நுழைவாயிலாக கிரீஸ் உள்ளது. இந்நிலையில், இந்த படகு எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


