News October 6, 2025
ரவி வர்மா ஓவியமே பாக்யஸ்ரீ போர்ஸ்!

ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் தந்திரம் தெரிந்த பாக்யஸ்ரீ போர்ஸ், மீண்டும் ஒரு போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். தெலுங்கில் கனவுக்கன்னியாக திகழும் இவரை தமிழ் படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் அன்பான கோரிக்கை. தற்போது வரை 4 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இவரது கால்ஷீட்டை பெற தயாரிப்பார்கள் போட்டி போடுகின்றனர்.
Similar News
News October 6, 2025
ஹாஸ்பிடல் தீ விபத்தில் 8 பேர் பலி: மோடி இரங்கல்

ஜெய்ப்பூரில் உள்ள ஹாஸ்பிடலில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் ஏற்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், காயமடைந்தோர் விரைந்து குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 6, 2025
கரூர் துயரம்: சற்றுமுன் அதிரடி கைது

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நீதிபதிகளை விமர்சித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் சம்பவ வழக்கில், TVK கட்சி மற்றும் நிர்வாகிகள் குறித்தும், விஜய்யின் தலைமை பண்பு குறித்தும் ஐகோர்ட் நீதிபதி கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையில், நீதிபதிகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் விமர்சித்த முன்னணி நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கும் சசிகுமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
News October 6, 2025
நீ பெரும் கலைஞன்..

கனடாவில் நடைபெற்ற அல்பெர்டா இந்திய திரைப்பட விழா 2025-ல், முதல்முறையாக ‘Golden Beaver Award’ என்ற விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் ஒருவரின் சாதனைகளையும், பங்களிப்பையும் கெளரவிக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருதை முதலில் பெற இவரை விட பெஸ்ட் சாய்ஸ் வேறொருவர் உண்டோ. பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் நடிகர் கமல்ஹாசன் இந்த விருதை பெற்றுள்ளார்.