News October 6, 2025
இந்தியாவின் பாதுகாப்பற்ற நகரம் எது தெரியுமா?

இந்தியாவிலேயே பாதுகாப்பற்ற நகரமாக கொச்சி உருவெடுத்துள்ளது. NCRB தகவலின் படி, கடந்த 2023ல் கொச்சியில் ஒரு லட்சம் பேருக்கு 3192.4 வாரண்ட் இன்றி கைது செய்யக்கூடிய குற்றங்கள் பதிவாகியுள்ளன. 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 19 மெட்ரோ நகரங்களில் இந்த ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் டெல்லி (2105.3), சூரத் (1377.1), ஜெய்ப்பூர் (1276.8), பாட்னா (1149.5) ஆகிய நகரங்கள் உள்ளன.
Similar News
News October 6, 2025
Recipe: கோதி அல்வா செய்வது எப்படி?

முழு கோதுமையை கழுவி, 6 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின் கிரைண்டரில் போட்டு அரைத்து, அதை பிழிந்து பாலெடுக்கவும். அதிலிருந்து கிடைக்கும் கெட்டியான பாலை எடுத்து, அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும். கொதி வந்ததும், அதில் பனை வெல்லம் சேர்க்கவும். அத்துடன், சிறுக சிறுக நெய் சேர்த்து இடைவிடாது கிளறவும். பதம் வந்ததும் ஏலக்காய் தூள், முந்திரி போட்டு இறக்கி ஆறவைத்தால் கோதி அல்வா ரெடி. SHARE IT.
News October 6, 2025
கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்: 11 மீனவர்கள் காயம்

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள், மீனவர்களை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் படகு என்ஜின், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, வலைகள், மீன்கள் மற்றும் தங்க செயின்களை பறித்துச் சென்றுள்ளனர். நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் தப்பி தடுமாறி கரைவந்து சேர்ந்துள்ளனர்.
News October 6, 2025
பிஹாருக்கு இன்று தேர்தல் தேதி அறிவிப்பா?

பிஹார் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். பிஹாரில் கடும் போட்டி இருக்கும் 59 தொகுதிகளில் பெரும்பாலான பெண் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற காங்., புகார் குறித்து விளக்கமளிக்கும் தேர்தல் ஆணையர், தேர்தல் தேதியை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.