News October 6, 2025
Cinema Roundup: ₹235 கோடி வசூலித்த ‘காந்தாரா: சாப்டர் 1’

*ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ 3 நாள்களில் ₹235 கோடி வசூலித்துள்ளதாக தகவல். *தனுஷின் ‘இட்லி கடை’ TN-ல் 4 நாள்களில் ₹30 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. *தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். *சத்யராஜின் ‘திரிபநாதரி பார்பரிக்’ வரும் 10-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகிறது. *ஜூனியர் என்.டி.ஆரின் ‘வார் 2’ அக்.9-ம் தேதி நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகும்.
Similar News
News October 6, 2025
கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்: 11 மீனவர்கள் காயம்

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள், மீனவர்களை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் படகு என்ஜின், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, வலைகள், மீன்கள் மற்றும் தங்க செயின்களை பறித்துச் சென்றுள்ளனர். நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் தப்பி தடுமாறி கரைவந்து சேர்ந்துள்ளனர்.
News October 6, 2025
பிஹாருக்கு இன்று தேர்தல் தேதி அறிவிப்பா?

பிஹார் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். பிஹாரில் கடும் போட்டி இருக்கும் 59 தொகுதிகளில் பெரும்பாலான பெண் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற காங்., புகார் குறித்து விளக்கமளிக்கும் தேர்தல் ஆணையர், தேர்தல் தேதியை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News October 6, 2025
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

ஆபரண தங்கத்தின் விலை ₹88 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹880 உயர்ந்து ₹88,480-க்கும், ஒரு கிராம் தங்கம் விலை ₹110 உயர்ந்து ₹11,060-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.