News October 6, 2025
பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள்

▶உன்னை அதிகமாக விமர்சிக்கும் மனிதன் உன்னைப் பற்றி மிகுந்த அச்சத்துடன் இருக்கிறான். ▶வெற்றியை அடையும் வரை அதை வீண் முயற்சி என்பார்கள், வென்ற பிறகு அதையே விடாமுயற்சி என சொல்லுவார்கள். ▶அறியாதவர்களை கற்பிக்கவும், அறிந்தவர்களிடம் அறிவைப் பகிரவும். ▶என்னை குற்றம் சாட்டுங்கள், எனக்கு அதில் கவலையில்லை; வரலாறே எனக்கு நீதியளிக்கும்.
Similar News
News October 6, 2025
மூலிகை: மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, மருதாணி இலையை அரைத்து பசையாக வைத்தால், கால் எரிச்சல் அடங்கும் *மருதாணியுடன் வசம்பு, மஞ்சள், கற்பூரத்தை அரைத்து, உள்ளங்காலில் ஆணி உள்ள இடத்தில் கட்டினால் குணமாகும் *கிருமி நாசினி என்பதால், மருதாணி இட்டுக் கொள்வதால் நகச்சுத்தி வராது *மருதாணியை அரைத்து நீரில் கரைத்து, வடிகட்டி அந்த நீரில் வாய்க் கொப்பளித்தால், வாய்ப்புண் தொல்லை நீங்கும். SHARE IT.
News October 6, 2025
திமுகவை டிடிவி பாராட்டுவது பச்சை துரோகம்: RB உதயகுமார்

டிடிவி தினகரனை நம்பி சென்ற 18 MLA-க்கள் இன்று அரசியல் அநாதையாகிவிட்டனர் என Ex அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். உங்களின் தளபதியாக இருந்தவர்கள் இப்போது ஸ்டாலினுக்கு தளபதியாக மாறியது ஏன் என டிடிவியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜெயலலிதாவின் கொடியை வைத்துக் கொண்டு <<17919640>>திமுகவை பாராட்டுவது<<>> பச்சை துரோகம் என்றும் உதயகுமார் சாடியுள்ளார்.
News October 6, 2025
பணக்காரராக உடனே இந்த செலவுகளை நிறுத்துங்க!

பணக்காரராக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அந்த இலக்கை அடையும் வழி பலருக்கும் தெரிவதில்லை. இந்த விஷயங்களை செய்தால், பணப்புழக்கம் அதிகரிக்கும் *சிறு துளி பெருவெள்ளம். சேமிப்பில் கவனம் செலுத்துங்கள் *தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிக்கும் ஆடம்பர செலவுகளை நிறுத்துங்க *கடன் வாங்குவது நிதி வளர்ச்சியை தடுக்கும். கடன் இல்லாமல் வாழுங்கள் *பட்ஜெட் போடாமல், தேவையின்றி செலவு செய்யக்கூடாது. SHARE IT.