News October 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 480 ▶குறள்: உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். ▶பொருள்: பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.

Similar News

News October 6, 2025

பெற்றோர்கள் இந்த வாய்ப்பை மிஸ் செய்யாதீங்க

image

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது. rteadmission@tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக பள்ளிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. RTE அடிப்படையில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் முழுக் கல்விச் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும். பெற்றோர்கள் இந்த வாய்ப்பை மிஸ் செய்யாதீங்க.

News October 6, 2025

பாகிஸ்தானுக்கு சரியான அடி: அமித்ஷா

image

மகளிர் உலகக் கோப்பையில் 88 ரன்களை வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். பாகிஸ்தானுக்கு சரியான அடி கொடுத்து, இந்திய மகளிர் அணி தனது வலிமையை வெளிப்படுத்தியதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் இந்திய அணியை நினைத்து தேசமே பெருமைப்படுவதாகவும், அடுத்த வரும் போட்டிகளுக்கும் வெற்றிபெற வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News October 6, 2025

மழைக்காலத்தில் குடிக்க வேண்டிய மூலிகை தேநீர்!

image

மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல், கோழை, மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் தூதுவளை தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைப்பிடி தூதுவளை இலை, சுக்கு, திப்பிலி, மிளகு, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் சுவையான தூதுவளை தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.

error: Content is protected !!