News October 6, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 6, புரட்டாசி 20 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 5:00 PM – 6:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: பவுர்ணமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
Similar News
News October 6, 2025
Sports Roundup: இரானி கோப்பை – விதர்பா சாம்பியன்

*இரானி கோப்பை கிரிக்கெட்டில், விதர்பா அணி சாம்பியன் பட்டம் வென்றது. *உகாண்டா பேட்மிண்டனில் இந்தியாவின் ரூஜுலா ராமு சாம்பியன் பட்டம் வென்றார். *ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20-ல் வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. *புரோ கபடியில் இன்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தபாங் டெல்லி அணிகள் மோதல். *மகளிர் உலக கோப்பையில், இன்று தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
News October 6, 2025
எந்த கிழமையில் எந்த கடவுளை வழிபட வேண்டும்?

கடவுளை வழிபட நேரம், காலம் இல்லை என்ற போதிலும், ஒரு சில நாள்கள் ஒவ்வொரு கடவுளுக்கு உகந்த தினமாகும். ஞாயிறன்று சூரிய பகவானை வழிபட வேண்டும். திங்களன்று சிவனையும், செவ்வாயில் முருகன், துர்கை அம்மன் வழிபாடுகளை செய்யலாம். புதனில் விஷ்ணு, விநாயகரையும், வியாழக்கிழமையில் தட்சணாமூர்த்தியை வணங்க வேண்டும். வெள்ளியில் மகாலட்சுமி வழிபாடும், சனிக்கிழமையில் அனுமன், பெருமாளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். SHARE.
News October 6, 2025
கூட்டணிக்கு வர விஜய்க்கு அழைப்பு

2026 தேர்தலில் திமுகவை தோற்கடிக்க அனைத்து அஸ்திரங்களையும் அதிமுக பயன்படுத்தும் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். திமுகவை விஜய் கடுமையாக எதிர்ப்பதாகவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி அவர் பேசுவதாகவும் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். எனவே, திமுகவை தோற்கடிக்க அதிமுக எல்லா கட்சிகளிடமும் பேசும், அழைப்பு விடுக்கும் என்று அவர் பேசியுள்ளார்.