News October 6, 2025
13-0! பாகிஸ்தானை பந்தாடும் இந்தியா

கொழும்புவில் நடந்த மகளிர் உலக கோப்பை போட்டியில், இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இதன் மூலம், ODI உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 13 போட்டிகளிலும் வெற்றி கண்டு இந்திய ஆடவர், மகளிர் அணிகளின் ஆதிக்கம் 100% தொடர்கிறது. இப்போட்டியில் 247 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்தியா, மகளிர் உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
Similar News
News October 6, 2025
இருமல் மருந்து விவகாரம்: 14 குழந்தைகள் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் <<17921980>>இருமல் மருந்து<<>> குடித்து உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் ஆதாரங்களை திரட்டுவதற்காக, சிந்த்வாரா மாவட்டத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தையின் உடலை தோண்டி எடுக்க சிறப்பு புலனாய்வு குழு முடிவெடுத்துள்ளது. இதனிடையே, தங்கள் மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட சிரப் பேட்ச்-ஐ கண்டறிய, TN அதிகாரிகளோடு மஹாராஷ்டிரா அதிகாரிகள் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளனர்.
News October 6, 2025
வானில் அரிதான அதிசயம்: PHOTOS

வண்ணக்கவிதை போல் வானவில் – சந்திரன் இரண்டும் ஒன்றாக தோன்றிய அற்புதமான காட்சி, புகைப்படமாக SM-யில் பரவி பலரையும் ஆச்சரியத்தில் தள்ளியது. இது, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே எடுக்கக்கூடிய புகைப்படம். இதுபோன்ற தருணம் இனி எப்போது வரும் என்று தெரியாது. மேலே உள்ள போட்டோக்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த இயற்கை அழகு எப்படி இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 6, 2025
திமுக அரசுக்கு பக்கவாத்தியம் வாசிக்காதீங்க: EPS

கரூர் துயரத்தில் திமுக அரசுக்கு பக்கவாத்தியம் வாசிப்பதை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும் என EPS விமர்சித்துள்ளார். In Karur Where there was no way out என்ற செய்தியை X-ல் சுட்டிக்காட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு செய்ய தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இவ்விஷயத்தில் குளறுபடி செய்த அரசின் நடவடிக்கைகளை, ஒரு நபர் விசாரணைக்கு குழு முழுமையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.