News October 6, 2025

முதலமைச்சர் நெல்லையில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி

image

பாளை மார்க்கெட் அருகில் மதர் ஹாஸ்பிடல் சமீபம் உணவு பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வக கட்டடத்தில் நவீன பகுப்பாய்வு உணவு பரிசோதனை இயந்திரங்களை (அக்.06) காலை 11 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில் கலெக்டர் சுகுமார், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

Similar News

News October 6, 2025

நெல்லை: மழைக்காலம் மின்வாரியம் முக்கிய எச்சரிக்கை

image

நெல்லை மாவட்ட மின் விநியோகம் பகிர்மான வட்ட சார்பில் இன்று அக்டோபர் ஐந்து விடுத்துள்ள செய்தி குறிப்பு: மழைக்காலம் தொடங்க உள்ளதால் மின்சாதனங்களை கையாள்வதில் உரிய முன்னெச்சரிக்கையுடன் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் மழை நேரத்தில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள் போன்ற இடங்களில் அருகே குழந்தைகளை விளையாட பெற்றோர் அனுமதிக்ககூடாது. கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்!

News October 5, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை, டவுன், தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.5] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் நிக்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News October 5, 2025

நெல்லையில் ரூ.40,000 வரை சம்பளத்தில் வேலை

image

திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் MTS, Security, OT Assistant என மொத்தமாக 44 காலி பணியிடங்கள் உள்ளன. 10th, 8th, B.Com, BE/B.Tech, BNYS, Diploma, ITI, M.Sc, MA, MSW படித்த தகுதியான நபர்களுக்கு ரூ.6,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில்<> கிளிக் <<>>விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 14-10-2025 வரை. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!