News October 5, 2025

‘விஜய் செய்தது தவறு’

image

கரூர் துயர சம்பவத்தின்போது விஜய் செய்தது தவறு என பிரேமலதா சாடியுள்ளார். கரூருக்கு குறித்த நேரத்திற்கு விஜய் செல்லவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், மக்கள் காத்து கிடக்கிறார்கள் என்ற பொறுப்பு இல்லாமல் கடமை உணர்வை தவறவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விஜயகாந்தை அண்ணன் எனக் கூறும் விஜய், அவர் என்ன செய்தார் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என பிரேமலதா காட்டமாக தெரிவித்துள்ளார்.

Similar News

News October 6, 2025

பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள்

image

▶உன்னை அதிகமாக விமர்சிக்கும் மனிதன் உன்னைப் பற்றி மிகுந்த அச்சத்துடன் இருக்கிறான். ▶வெற்றியை அடையும் வரை அதை வீண் முயற்சி என்பார்கள், வென்ற பிறகு அதையே விடாமுயற்சி என சொல்லுவார்கள். ▶அறியாதவர்களை கற்பிக்கவும், அறிந்தவர்களிடம் அறிவைப் பகிரவும். ▶என்னை குற்றம் சாட்டுங்கள், எனக்கு அதில் கவலையில்லை; வரலாறே எனக்கு நீதியளிக்கும்.

News October 6, 2025

அமெரிக்காவுக்கு ஆஃபர் கொடுத்த பாகிஸ்தான்

image

அரபிக் கடலில் துறைமுகம் கட்ட அமெரிக்காவுக்கு ஆஃபர் ஒன்றை பாகிஸ்தான் கொடுத்துள்ளது. இது குறித்து US அதிகாரிகளை அணுகிய, பாக்., ராணுவ தளபதி அசிம் முனிரின் ஆலோசகர்கள் துறைமுகம் கட்டினால், தங்கள் நாட்டின் பஸ்னி பகுதியில் உள்ள கனிமங்களை US முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பாக்., PM, அசிம் முனீர் ஆகியோர் டிரம்ப்பை சந்தித்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

News October 6, 2025

ஆர்சிபி வீரர் லியம் லிவிங்ஸ்டோனுக்கு திருமணம்

image

ஆர்சிபி வீரர் லியம் லிவிங்ஸ்டோனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனது நீண்ட நாள் காதலியான ஒலிவியாவை அவர் கரம் பிடித்துள்ளார். இருவரும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டதாக அவர் இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிட்டுள்ள நிலையில், கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Congrats Liam..

error: Content is protected !!