News October 5, 2025

மாதம் ₹3 லட்சம் சம்பாதிக்கும் ஆட்டோக்காரர்!

image

ஒயிட் காலர் வேலை செய்பவர்களை, பெங்களூரு ஆட்டோக்காரர் ஒருவர் ஓவர்டேக் செய்துள்ளார். ₹5 கோடி மதிப்பில் 2 வீடுகள், அதை வாடகைக்கு விட்டு மாதம் ₹2 – 3 லட்சம் வருமானம், இதுபோக ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளார் அந்த ஆட்டோக்காரர். அவரது கதையை கேட்ட இன்ஞ்சினியர் ஒருவர், சோசியல் மீடியாவில் பதிவிட இணைய உலகில் இதுதான் தற்போது பேசுபொருள். இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

Similar News

News October 6, 2025

ஆர்சிபி வீரர் லியம் லிவிங்ஸ்டோனுக்கு திருமணம்

image

ஆர்சிபி வீரர் லியம் லிவிங்ஸ்டோனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனது நீண்ட நாள் காதலியான ஒலிவியாவை அவர் கரம் பிடித்துள்ளார். இருவரும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டதாக அவர் இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிட்டுள்ள நிலையில், கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Congrats Liam..

News October 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 480 ▶குறள்: உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். ▶பொருள்: பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.

News October 6, 2025

கரூர் துயரத்தில் உள்ளூர் ரவுடிகளுக்கு பங்கு: பிரேமலதா

image

கரூர் விஷயத்தில் விஜய்யை பக்கா பிளான், ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறார்கள் என்று பிரேமலதா குற்றஞ்சாட்டியுள்ளார். விஜய்யை விரும்பி பார்க்க வந்த கூட்டம் செருப்பு வீசியிருக்க வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதை செய்தது உள்ளூர் ரவுடிகள் என்றும் அவர்களை இயக்கியது ஒரு முன்னாள் மந்திரி எனவும் அவர் சாடியுள்ளார். இந்த உண்மைகள் ஒரு நாள் வெளியே வரும் என்று பிரேமலதா பேசியுள்ளார்.

error: Content is protected !!