News October 5, 2025
ஊதா பூவாக மின்னும் ராஷி கண்ணா PHOTOS

நடிகை ராஷி கண்ணா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். திருச்சிற்றம்பலம், அரண்மனை படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். இவர், தனது லேட்டஸ்ட் போட்டோஸை, இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். ஊதா வண்ண உடையில் மின்னும் ராஷி கண்ணா போட்டோஸ் பிடித்திருந்தா லைக் போடுங்க.
Similar News
News October 6, 2025
AK64 : அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள AK64 படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இம்மாதமே படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், பிப்ரவரி மாதம் வரை அஜித் கார் ரேஸிங்கில் கவனம் செலுத்துவார் என சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். எனவே, வேறு வழியின்றி மார்ச் மாதம் வரை அஜித்திற்காக காத்திருக்க ஆதிக் முடிவெடுத்துள்ளாராம். இதனால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
News October 6, 2025
அரசியல் கூட்டங்களுக்கு தடை.. அன்புமணி காட்டம்

கரூர் நிகழ்வை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை தடை செய்வதை ஏற்க முடியாது என அன்புமணி தெரிவித்துள்ளார். புதிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், இது கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் செயல் என்றும் சாடியுள்ளார். மேலும், விதிமுறைகளை வகுக்கும் வரை மக்கள் கூடும் இடங்களில் கூட்டங்கள், ஊர்வலங்களை நடத்த TN அரசு இடைக்கால அனுமதி அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
News October 6, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 6, புரட்டாசி 20 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 5:00 PM – 6:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: பவுர்ணமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை