News October 5, 2025
ஆணவத் திமிருக்கு எதிராக TN போராடும்: CM ஸ்டாலின்

தமிழ்நாடு யாருடன் போராடும்? என ஆளுநர் கேட்டதற்கு, இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என கூறும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும் என CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் தமிழ்நாடு போராடும் என்று அவர் கூறியுள்ளார்.
Similar News
News October 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 6, 2025
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

ஆஸ்திரேலியா A-வுக்கு எதிரான 3-வது அன் அபிசியல் ODI-ல் இந்தியா A, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கான்பூரில் நடந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸி., 49.1 ஓவர்களில் 316 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய இந்திய அணியில் பிரப்சிம்ரன் சிங் சதம், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ரியான் பராக் அரைசதங்கள் விளாசி வெற்றிக்கு உதவினர். இதனால், 2-1 என்ற கணக்கில் இந்தியா A தொடரை கைப்பற்றியது.
News October 6, 2025
BIGBOSS: வாட்டர்மெலன் ஸ்டார் தேர்வாக இதுவா காரணம்?

வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை பிக்பாஸில் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தை விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார். பல கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்வுக்கு பின்னரே அவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், பிசியோதெரபி துறை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகச்சரியாக பதிலை அளித்ததாகவும் VJS கூறியுள்ளார். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிக்பாஸ் 9-வது சீசன் இன்று தொடங்கியுள்ளது.