News October 5, 2025

தங்கம் விலை தொடர்ந்து உயர காரணம் இதுதான்

image

கல்யாணம் மற்றும் பண்டிகை சீசன், அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கொள்கை, ரூபாய் மதிப்பு குறைவது போன்ற காரணங்களால் தற்போது மக்கள் தங்கம் வாங்குவது அதிகமாக உள்ளது. மேலும், ரஷ்ய-உக்ரைன் போர், டாலரை சார்ந்திருப்பதை குறைக்க உலக நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கிக் குவிப்பது ஆகியவற்றாலும் தங்கத்துக்கு தேவை அதிகம் உள்ளது. ஆனால், உற்பத்தியோ குறைவு என்பதால் விலை தாறுமாறாக ஏறுகிறது. SHARE IT

Similar News

News October 6, 2025

ஆண்களை விட பெண்கள் குளிராக உணர்வது ஏன்?

image

ஆண்களை விட பெண்கள் அதிக குளிரை உணர்வதாக அறிவியல் ஆய்விதழ்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் சராசரியாக 2.5° செல்சியஸில் கதகதப்பாக சௌகரியமாக உணர்கின்றனர். மாதவிடாய், வளர்சிதை மாற்றம், ஹார்மோன் சமநிலை மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக இது நிகழ்கிறது. ஆண்களை விட பெண்களுக்கு சராசரி வளர்சிதை மாற்ற விகிதம் குறைவாக இருப்பதால், உடல் வெப்பத்தை உருவாக்கும் திறனை இவை குறைக்கின்றன.

News October 6, 2025

தேர்தல் நடைமுறையில் 17 மாற்றங்கள் அறிவிப்பு (1/2)

image

*பதிவு செய்து 15 நாள்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். *1,500 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்பது 1,200-ஆக குறைப்பு. *வேட்பாளரின் புகைப்படம் கருப்பு வெள்ளைக்கு பதிலாக கலராகவும், EVM-ல் உள்ள எழுத்துக்கள் பெரிதாகவும் பொறிக்கப்படும். *பூத் ஏஜெண்டுகளுக்கு பயிற்சி. *EVM வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருந்தால், VVPAT ரசீதுகளும் எண்ணப்படும்.

News October 6, 2025

தேர்தல் நடைமுறையில் 17 மாற்றங்கள் அறிவிப்பு (2/2)

image

*பூத் அதிகாரிகளுக்கு ஐடி கார்டு. *சட்டம், ஒழுங்கை பேண காவல்துறைக்கு சிறப்பு அமர்வுகள். *போலி வாக்காளர்களை நீக்க SIR நடைமுறை. *தபால் வாக்குகளுக்கு பதிலாக, முதலில் EVM வாக்குகள் எண்ணப்படும். *தேர்தல் முடிந்ததும், எத்தனை பேர் வாக்களித்தது, அதில் ஆண்கள், பெண்கள் எத்தனை என்பது போன்ற விவரங்கள் அனைவரும் அறிந்துகொள்ளும்படி பொதுவெளியில் வைக்கப்படும்.

error: Content is protected !!