News October 5, 2025
ரோஹித் ஓரங்கட்டப்பட இதுவா காரணம்?

ரோஹித்திடம் இருந்து ODI கேப்டன் பதவி பறிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில், மிக முக்கியமானது அவரது வயதுதான் என்கின்றனர் BCCI நிர்வாகிகள். அவருக்கு தற்போது 38 வயதாகிறது. 2027 ODI WC-யின் போது, அவருக்கு 40 வயதாகும். அதேபோல், இதே ஃபிட்னஸ் 40 வயதில் நீடிக்குமா என்பதும் சந்தேகம் தான். எனவே, ரோஹித்திடம் ஆலோசித்த பின்னரே, கில்லுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News October 6, 2025
PoK-ஐ திரும்ப எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்

ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு வீடு; ஆனால், சிலர் வீட்டில் இருந்த ஒரு அறையை (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) ஆக்கிரமித்துள்ளதாக RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ம.பி.,யில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தாங்கள் திரும்ப எடுத்துக் கொள்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பிளவுபடாத இந்தியாவை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 6, 2025
சிறந்த கருத்தடை முறை எது தெரியுமா?

கருத்தடை முறைகளின் பாதுகாப்பு, எந்த அளவுக்கு அவற்றை சரியாக பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே அமையும். பாதுகாப்பு முறைகளை 100% கடைப்பிடித்தால் ஆணுறை 98% வெற்றிகரமாக கர்ப்பத்தை தடுக்கிறது. சாதாரணமாக பயன்படுத்தும் போது, 82% அளவுக்கே கர்ப்பத்தை தடுக்கிறது. பெண்கள் பயன்படுத்தும் காப்பர்-டி -99%, கருத்தடை மாத்திரை -99% (ஓரிரு நாள் தவறினால் 91%), கருத்தடை அறுவை சிகிச்சை -98% கர்ப்பத்தை தடுக்கிறது.
News October 6, 2025
ஏன் இதெல்லாம் நடக்குதுனு தெரியுமா?

இந்த உலகில் நம் அறிவுக்கு எட்டாத ஏராளமான விஷயங்கள் உள்ளன. பல விஷயங்களுக்கு அறிவியல் விளக்கம் அளித்தாலும், சில விஷயங்கள் விளக்க முடியாதவையாக இருக்கின்றன. இதுபோன்று மர்மம் நிறைந்த சில விஷயங்களை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு விளக்கம் இல்லாத விஷயம் ஏதேனும் தெரிந்தா, கமெண்ட்ல சொல்லுங்க.