News April 15, 2024
நடிகை கௌதமி பிரச்சாரம்

மக்களவைத் தேர்தலில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் தமிழ்மணி போட்டியிடுகிறார். இந்நிலையில் இத்தொகுதி முழுவதும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே திரைப்பட நடிகை கௌதமி, அதிமுக வேட்பாளர் தமிழ் மணிக்கு ஆதரவாக நாமக்கல் நகர் முழுவதும் நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கட்சியினர் பலர் உடனிருந்தனர்.
Similar News
News December 26, 2025
நாமக்கல் வாக்காளர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள வாக்காளர்கள் மற்றும் வரும் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் புதிய வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்கம் (ம)முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கிடும் வகையில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும்(ஞாயிற்றுக்கிழமை) வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
News December 26, 2025
நாமகிரிப்பேட்டையில் கூண்டோடு விலகிய நிர்வாகிகள்!

நாமகிரிப்பேட்டை பேரூரை சேர்ந்த முன்னாள் தேமுதிக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முன்னாள் கவுன்சிலர் எம்.ஜெகதிஸ் தலைமையில் அக்கட்சியிலிருந்து விலகி 10 பேரும், பாஜகவிலிருந்து விலகி 5 பேரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என் ராஜேஷ்குமார் முன்னிலையில் இன்று திமுக தங்களை இணைத்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News December 26, 2025
நாமக்கல் பக்தர்களின் கவனத்திற்கு!

நாகர்கோவிலில் இருந்து ஆந்திர மாநிலம் காச்சிகுடா வரை செல்லும் வாராந்திர விரைவு ரயில் (16354), நாளை சனிக்கிழமை (டிசம்பர் 27) மாலை 5:40 மணிக்கு நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். இந்த ரயில் நாமக்கல்லில் இருந்து காட்பாடி, திருப்பதி, கடப்பா, கூட்டி, கர்னூல், மஹபூப்நகர் மற்றும் ஹைதராபாத் ஆகிய முக்கிய நகரங்கள் வழியாகச் செல்கிறது.


