News October 5, 2025

நவ.22-க்குள் பிஹார் தேர்தல்

image

பிஹார் தேர்தலில் 17 புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறைகள், இனி அனைத்து தேர்தல்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், பிஹார் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளும் ஆன்லைனில் கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நவ.22-க்குள் பிஹாரில் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 5, 2025

PPF திட்டம்: பாதுகாப்பான முதலீடு!

image

நீண்டகால முதலீடு & சேமிப்பு திட்டமாக மத்திய அரசின் PPF உள்ளது. PPF திட்ட முதலீட்டுக்கு வருமானவரிச் சலுகையும் உண்டு. அஞ்சல் நிலையத்திலேயே கணக்கு தொடங்கி கட்டலாம். குறைந்தபட்ச முதலீட்டு தொகை ஆண்டுக்கு ₹500, அதிகபட்ச தொகை ஆண்டுக்கு ₹1.50 லட்சம். கணக்கு திறந்த ஆண்டை தவிர்த்து 15 ஆண்டுகளில் மெச்சூரிட்டி ஆகும். கணக்கு தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பின்பே பணத்தை எடுக்க முடியும். இதற்கான ஆண்டு வட்டி 7.1% ஆகும்.

News October 5, 2025

விஜய் ரசிகர்களுக்கு சோகம்

image

‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடலை தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாம். ஆனால், அதற்குள் கரூர் துயரத்தில் 41 பேர் பலியான சோகம் நிகழ்ந்தது. இதனால், விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் பாடலை ரிலீஸ் செய்ய வேண்டாம் என விஜய் தரப்பு முடிவு செய்துள்ளது. இதனால், முதல் பாடலை காலவரையின்றி ஒத்திவைக்க படக்குழுவிடம் விஜய் கூறியுள்ளாராம்.

News October 5, 2025

நிச்சயமாக ஒருநாள் கேப்டன் ஆவேன்: ஜெய்ஸ்வால்

image

ஒவ்வொரு நாளும் தலைவனாவதற்கான பண்புகளை வளர்த்து வருவதாக ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ஒருநாள், நிச்சயமாக இந்திய அணியின் கேப்டனாக களமிறங்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆரம்பத்தில் பானிபூரி விற்று பிழைப்பு நடத்தியதை நினைவு கூர்ந்த அவர், நீங்கள் 100% உழைப்பை செலுத்தினால், எந்த வேலையும் சிறுமை கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!