News October 5, 2025
BREAKING: விஜய் முக்கிய உத்தரவு

கரூர் துயர சம்பவத்தையொட்டி கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய விஜய் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். மக்களுக்கு இடையூறாக எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகே, கட்சி நடவடிக்கைகளை தான் தொடர இருப்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளாராம். விரைவில் தவெக மா.செ.,-க்கள் கூட்டமும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 14, 2026
வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ₹10,000 குறைந்தது!

தங்கத்தை போன்றே இன்று (மார்ச் 14) வெள்ளி விலையும் குறைந்துள்ளது. 1 கிராம் ₹10 குறைந்து ₹280-க்கும், 1 கிலோ வெள்ளி ₹10,000 குறைந்து ₹2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வரும் நாள்களில் இந்திய சந்தையிலும் இதன் தாக்கம் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
News March 14, 2026
பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குக

போர் பதற்றத்துக்கிடையே பலரும் கேன், டின்களில் பெட்ரோல், டீசலை வாங்கிச் சென்றனர். இதனையடுத்து, இவ்வாறு பாதுகாப்பின்றி எரிபொருள் வழங்கக்கூடாது என இந்திய ஆயில் நிறுவனம் அறிவுறுத்தியது. ஆனால் இதை வாடிக்கையாளர்களிடம் கூறினால், அவர்கள் ஊழியர்களை மிரட்டுவதாக பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றனர். எனவே, TN-ல் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி DGP-க்கு கடிதம் எழுதியுள்ளனர்.
News March 14, 2026
அண்ணாமலை கேட்கும் தொகுதியை கொடுக்காத EPS

வரும் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், கோவை மாவட்டத்தில் பாஜகவுக்கு ஒரு தொகுதிதான் தர முடியும்; வேண்டுமானால், கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட பல்லடம் தொகுதியில் போட்டியிடட்டும் என EPS கூறுகிறாராம். அதேபோல், வேளச்சேரியில் போட்டியிட தமிழிசை விரும்பும் நிலையில், விருகம்பாக்கம் (அ) மயிலாப்பூர் தொகுதியை கொடுக்க EPS முன்வந்துள்ளாராம்.


