News October 5, 2025
ஃபாஸ்ட் டேக் விதியில் புதிய மாற்றம்

FASTag இல்லாதவர்களுக்கு டோல் கட்டணம் இரட்டிப்பாக வசூலிக்கப்படும் என்ற விதியில் மாற்றம் வந்துள்ளது. அதாவது, UPI மூலம் கட்டணம் செலுத்துவோருக்கு, கட்டணத்தில் இருந்து 1.25 மடங்கு தான் அதிகமாக வசூலிக்கப்படும். உதாரணத்துக்கு, நீங்கள் பாஸ்ட் டேக் மூலம் செலுத்தும் கட்டணம் ₹100 என்றால், பணமாக செலுத்துவோருக்கு ₹200 என்றும், UPI மூலம் செலுத்துவோருக்கு ₹125 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 5, 2025
மாமியாருக்கு தாலி கட்ட முயன்ற மருமகன்

திருப்பதியில் மாமியாருக்கு மருமகன் தாலி கட்ட முயன்றுள்ளார். மருமகன்(18), மகளுடன்(15) மாமியாரும்(40) ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது, மருமகன், மாமியார் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மனைவியின் எதிர்ப்பை மீறி மாமியாருக்கு அவர் தாலி கட்ட முயன்றுள்ளார். இதை தடுத்த மனைவியை, இருவரும் கொல்ல முயன்றுள்ளனர். அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளனர். இதெல்லாம் தேவையா?
News October 5, 2025
சருமம் பளபளக்க..

சருமத்தை பளபளப்பாக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இவை, சருமத்தின் ஈரப்பதத்தை காத்து பளபளப்பாக்கவும் உதவுகின்றன. மேலும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமத்தில் உள்ள நச்சுகளையும் நீக்குகின்றன. இதேபோல் உங்களுக்கு தெரிந்த டிப்ஸை கமென்ட்டில் சொல்லுங்க.
News October 5, 2025
தங்கம் விலை தலைகீழாக மாறுகிறது

தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு 22 ct சவரன் ₹87,600-க்கும், 24 ct சவரன் ₹91,984-க்கும் விற்பனை ஆகிறது. இப்படியே போனால் சில நாள்களில் ₹1 லட்சத்தை எட்டிவிடும். இந்நிலையில், பண்டிகை சீசன் உள்பட <<17922343>>பல்வேறு காரணங்களால்<<>> ஊதிப் பெருகியுள்ள தங்கம் விலை, திடீரென 40% வரை குறைய வாய்ப்புள்ளதாக சில நிபுணர்கள் கணிக்கின்றனர். ஆகவே, மேலும் விலை உயரும் என அவசர அவசரமாக தங்கம் வாங்குவதை தவிர்க்கலாம் என்கின்றனர்.