News October 5, 2025
BREAKING: பணியை தொடங்கினார் விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்கான பணிகளை விஜய் தொடங்கியுள்ளார். அரசு சார்பில் தலா ₹10 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், விஜய் அறிவித்த நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை தவெக நிர்வாகிகள் சேகரித்து வருகின்றனர். பலியானோர் குடும்பத்தினருக்கு விரைவில் தலா ₹20 லட்சத்தை விஜய் வழங்க உள்ளாராம்.
Similar News
News October 5, 2025
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய ஆதார் ஏற்பு?

ஆதாரை குடியுரிமைக்கான சான்றாக கருதமுடியாது என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது (SIR) ஆதார் ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். முன்னதாக, பிஹார் SIR-ன் போது, ஆதாரை ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால், அவை குடியுரிமைக்கான சான்று இல்லை என SC தெரிவித்து இருந்தது.
News October 5, 2025
மாமியாருக்கு தாலி கட்ட முயன்ற மருமகன்

திருப்பதியில் மாமியாருக்கு மருமகன் தாலி கட்ட முயன்றுள்ளார். மருமகன்(18), மகளுடன்(15) மாமியாரும்(40) ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது, மருமகன், மாமியார் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மனைவியின் எதிர்ப்பை மீறி மாமியாருக்கு அவர் தாலி கட்ட முயன்றுள்ளார். இதை தடுத்த மனைவியை, இருவரும் கொல்ல முயன்றுள்ளனர். அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளனர். இதெல்லாம் தேவையா?
News October 5, 2025
சருமம் பளபளக்க..

சருமத்தை பளபளப்பாக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இவை, சருமத்தின் ஈரப்பதத்தை காத்து பளபளப்பாக்கவும் உதவுகின்றன. மேலும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமத்தில் உள்ள நச்சுகளையும் நீக்குகின்றன. இதேபோல் உங்களுக்கு தெரிந்த டிப்ஸை கமென்ட்டில் சொல்லுங்க.