News October 5, 2025
பிரபல தமிழ் எழுத்தாளர் காலமானார்

‘குறிஞ்சிசெல்வர்’ என போற்றப்படும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் காலமானார். ‘காட்டுக்குள்ளே இசைவிழா’ எனும் சிறுவர் நூலுக்கு 2012-ல் சாகித்ய அகாடமியின் புரஸ்கார் விருதை பெற்றவர். நாவல், சிறுகதை உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக, அரிய மூலிகைகள், விலங்கு, பறவைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News March 22, 2026
திருமாவளவனின் அடுத்த முக்கிய நகர்வு

திமுக-விசிக இடையிலான தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகாத சூழலில், நாளை அக்கட்சியின் உயர்நிலை குழு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும் என திருமாவளவன் அறிவித்துள்ளார். இதில் விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வு செய்வது, தேர்தல் பணிகள், தேர்தல் அறிக்கை தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் விசிக MLA-க்கள், பொ.செ.,க்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
News March 22, 2026
பெற்றோர்களே இந்த தவறுகளை செய்கிறீர்களா?

குழந்தைகள் மனம் மிகவும் மென்மையானது. நீங்கள் தெரியாமல் செய்யும் சில விஷயங்கள் கூட அவர்களை அதிகம் பாதிக்கலாம். ➤ஒரு பிள்ளைக்கு மட்டும் அதிகம் செல்லம் கொடுக்காதீர்கள் ➤எதிர்த்து பேசும் குழந்தைகளை அடக்க வேண்டாம். அமைதியாக சொல்லி புரிய வையுங்கள் ➤அவர்கள் செய்யும் தவறுகளை தண்டோரா போடாதீர்கள் ➤13 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். SHARE.
News March 22, 2026
நிர்வாகிகளை குஷிப்படுத்த விஜய் முடிவு

தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பாக கட்சி நிர்வாகிகளை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 26-ம் தேதி மாமல்லபுரத்தில் 2000-க்கும் மேற்பட்ட வட்ட, ஒன்றிய, நகராட்சி அளவிலான நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுடன் உரையாடி விஜய் போட்டோஷூட் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் உற்சாகமாக செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு நடக்கிறதாம்.


