News October 5, 2025

ஓடிடியில் வெளியானது ’காந்தி கண்ணாடி’!

image

பாலா நடிப்பில் செப்.5-ம் தேதி வெளியான ’காந்தி கண்ணாடி’ திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தில் நடித்த பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோரின் நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது. ₹3.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவான நிலையில், உலகளவில் ₹4.27 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Similar News

News March 26, 2026

நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை: சீமான்

image

திருடர்களிடம் ஆட்சியை கொடுத்ததால், திருடிய காசில் ₹1,000 ₹2,000 பங்கு கொடுக்கிறான் என சீமான் விமர்சித்துள்ளார். கல்வி, மின்சாரம், மருத்துவத்தை திமுக இலவசமாக்காதது ஏன் என கேட்டுள்ளார். இலவசம் கொடுத்து மக்களை சோம்பேறியாக்கி, வடமாநிலத்தவருக்கு வேலை வழங்குவதாகவும், வட மாநிலத்தவருக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கினால், நாட்டை விட்டே வெளியேற வேண்டியதுதான் என்றும் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

Impact Player விதி நீடிக்குமா?

image

2023-ல் கொண்டுவரப்பட்ட Impact Player விதியை தொடரலாமா என்ற கேள்விக்கு அனைத்து IPL டீம் கேப்டன்களிடமும் கலவையான பதில்களே வெளிப்பட்டதாம். குறிப்பாக, MI கேப்டன் ஹர்திக் & DC கேப்டன் அக்சர் ஆகியோர் எதிராக பேசினார்களாம். இருப்பினும் 2027 சீசன் வரை இந்த விதி தொடரும் என்பதால், அதன் பின்னரே முடிவெடுக்கப்படும். போட்டி நடுவில் ஒரு extra player-ஐ substitute ஆக கொண்டு வர வைப்பதே Impact Player விதி.. தேவையா?

News March 26, 2026

திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில்: EPS

image

திமுக கூட்டணி கட்சிகள் போராடி தொகுதிகளை பெறும் அவல நிலை உள்ளது என EPS விமர்சித்துள்ளார். அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக இடம், விசிகவுக்கு குறைந்த தொகுதி என்ற அவர், திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும் என்பதை இனியாவது உணருங்கள் என்றார். மேலும், திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி தலைவர்கள் சுதந்திரமாக உள்ளதாக கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!