News October 5, 2025
விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்: டிடிவி

கரூர் கூட்ட நெரிசல் ஒரு விபத்துதான்; யார் மீதும் பழிபோட முடியாது என்று டிடிவி தெரிவித்துள்ளார். விஜய்யை கைது செய்ய கூட்டணி கட்சிகள் CM ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால், அவரை கைது செய்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும். இதனாலே இச்சம்பவத்தில் ஸ்டாலின் நிதானமாக செயல்படுகிறார். கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்; அது குற்றத்தை ஏற்பது ஆகாது என்றார்.
Similar News
News October 5, 2025
நேபாளத்தில் கனமழை: நிலச்சரிவில் 47 பேர் பலி

நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். இலம் மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் வெள்ளத்தில் 9 பேர் மாயமான நிலையில், 3 பேர் மின்னல் தாக்கி உயிரை பறிகொடுத்துள்ளனர். நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
News October 5, 2025
கேள்விகளை விஜய்யிடம் கேளுங்கள்: செந்தில் பாலாஜி

கரூர் சம்பவம் குறித்து தன்னிடம் கேட்கும் கேள்விகளை விஜய்யிடம் கேளுங்கள் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது இவ்வாறு கூறியுள்ளார். ஏன் ஏழு மணி நேரம் தாமதமாக வந்தீர்கள், டிசம்பர் மாதம் திட்டமிட்டு இருந்த பிரசாரம் முன்கூட்டியே நடந்தது ஏன் உள்ளிட்ட கேள்விகளை விஜய்யிடம் கேட்டிருக்க வேண்டும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
News October 5, 2025
BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும்…

காலாண்டு விடுமுறை முடிந்து நாளை வகுப்புகள் தொடங்கும் நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பருவமழை தொடங்கவுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, *மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது. *உபயோகம் இல்லாத மின் பொருள்கள் பள்ளி வளாகத்தில் இருக்கக் கூடாது. *பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.