News April 15, 2024

தேனி அருகே விபத்து: ஒருவர் பலி 

image

பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று தனது டூவீலரில் செட்டிகுளம் கண்மாய் அருகே சென்ற போது எதிரே வந்த வேன் மோதியதில் தலையில் பலத்த காயங்களுடன் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து கோம்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 26, 2025

தேனியில் கணவரை கொலை செய்த மனைவி!

image

பல்லவராயன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மர் (57). இவருடைய மனைவி சந்திரா (54). இவர்களது மகன் அஜித் (27). தர்மர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு தர்மர் வழக்கம் போல் மது குடித்து விட்டு வீட்டில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவியும், மகனும் கட்டையால் தர்மரை தாக்கி கொலை செய்தனர். கோம்பை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

News December 25, 2025

தேனி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப சுலபம்..

image

தேனியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது <>இந்த லிங்க <<>>மூலம் செயலியில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்யவேண்டும். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும்.தகவலை SHARE பண்ணி உதவுங்க.

News December 25, 2025

தேனி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

image

தேனி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04546 – 255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!