News October 5, 2025
கேப்டன்களின் கேப்டனான ரோஹித் சர்மா!

ODI கிரிக்கெட்டின் மிக சிறந்த கேப்டன்களில் ஒருவராக தனது Legacy-யை ரோஹித் சர்மா நிலைநிறுத்தியுள்ளார் *சர்வதேச அளவில் அதிக வெற்றி (குறைந்தது 100 மேட்ச்) கொண்ட கேப்டன் பட்டியலில் முதல் இடம் (72.5 %) *ICC தொடர்களில் அதிக வெற்றி பெற்ற கேப்டன்களில் முதல் இடத்தில்(87.1%) ரோஹித் உள்ளார். ஜாம்பவான்களான பாண்டிங், தோனி ஆகியோரையும் ரோஹித் முந்தியுள்ளார். உங்களுக்கு பிடித்த கேப்டன் ரோஹித் மொமெண்ட் எது?
Similar News
News October 5, 2025
அடுத்த முறை சாப்பாட்டை வீணாக்குவதற்கு முன்..

*இந்தியாவின் 12% மக்கள் சத்தான உணவு கிடைக்காமல் தவிக்கின்றனர் *19 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர் *127 நாடுகளை கொண்ட Global Hunger பட்டியலில் இந்தியா 105-வது இடத்தில் உள்ளது *ஆனால், உணவை வீணாக்கும் நாடுகளின் பட்டியலில் டாப் 2-ல் இந்தியா உள்ளது. ஒரு ஆண்டில் சுமார் 78.1 மில்லியன் டன் உணவை இந்தியர்கள் வீணாக்குகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே அடுத்தமுறை வீணாக்குவதற்கு முன் யோசியுங்க.
News October 5, 2025
ரோஹித் ஓரங்கட்டப்பட இதுவா காரணம்?

ரோஹித்திடம் இருந்து ODI கேப்டன் பதவி பறிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில், மிக முக்கியமானது அவரது வயதுதான் என்கின்றனர் BCCI நிர்வாகிகள். அவருக்கு தற்போது 38 வயதாகிறது. 2027 ODI WC-யின் போது, அவருக்கு 40 வயதாகும். அதேபோல், இதே ஃபிட்னஸ் 40 வயதில் நீடிக்குமா என்பதும் சந்தேகம் தான். எனவே, ரோஹித்திடம் ஆலோசித்த பின்னரே, கில்லுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
News October 5, 2025
அதிகரிக்கும் அரியவகை சிறுத்தை – PHOTOS

இமாச்சலப் பிரதேசத்தில் வாழும் பனிச்சிறுத்தைகள் உலகின் மிகவும் அரிதான மற்றும் அழகான சிறுத்தை வகையைச் சேர்ந்தது. இதன் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், பல பாதுகாப்பு திட்டங்கள் மூலம் சிறுத்தை வாழ்விடங்களை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, சமீபத்திய கணக்கெடுப்பில், பனிச்சிறுத்தைகள் கடந்த 4 ஆண்டுகளில் 51-இல் இருந்து 83-ஆக உயர்ந்துள்ளன. மேலே உள்ள போட்டோஸ் பிடிச்சா லைக் போடுங்க.