News October 5, 2025
நாமக்கல்: டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தொண்டாற்றி வரும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2025ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பப் படிவம் கிடைக்கும். அதை பூர்த்து செய்து அக்.15ந் தேதிக்குள் அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தகவல்.
Similar News
News October 5, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (05.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 5, 2025
நாமக்கல்: தொழில் வளம் தரும் நாகேஸ்வரர்!

நாமக்கல், பெரியமணலி அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு நாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக நாகேஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும் மற்றும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் மந்தநிலை நீங்கும், பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தொழில் செய்யும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 5, 2025
நாமக்கல்: ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை!

முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு வெளிநாடு சென்று முதுகலைப்படிப்பு படிக்க ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பம் https://bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htmல் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு அக்.31 ஆம் தேதிக்குள் அனுப்ப நாமக்கல் ஆட்சியர் தகவல்.