News October 5, 2025
டிடிவி ஒரு சுயநலவாதி: ஆர்.பி.உதயகுமார்

சுயநலத்தின் மொத்த உருவமாக கருத்து கந்தசாமி தினகரன் பேசியிருப்பதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். அதிமுகவின் உண்மை தொண்டர்கள், விசுவாசிகள், மக்கள் தினகரனின் உண்மை முகத்தை புரிந்து கொண்டனர். பொதுநலம் மறந்து சுயநலவாதியாக செயல்படுபவர் அரசியல் பாதையை வகுக்க முடியாது எனக் கூறிய அவர், தன்னை நம்பியவர்கள் அனைவரையும் திமுகவிற்கு வழியனுப்பி வைத்தவர்தான் டிடிவி என்றும் சாடியுள்ளார்.
Similar News
News March 30, 2026
BREAKING: நாளை டாஸ்மாக் கடைகள் விடுமுறை

மஹாவீர் ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 31) மதுக்கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. தேர்தலையொட்டி, ஏப்.21, 22, 23 மற்றும் மே 4 ஆகிய தேதிகளில் ஏற்கெனவே டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதியும் மதுக்கடைகள் இயங்காது. SHARE IT
News March 30, 2026
CINEMA 360: சக்திமானாக மாறும் அல்லு அர்ஜுன்

மலையாள இயக்குநர் பேசில் ஜோசப் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் சூப்பர் ஹீரோ படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இது சக்திமான் படமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. *‘LIK’ படத்தின் ‘அடாவடி’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது *அனுஷ்கா நடித்துள்ள ‘காத்தனார்’ படத்தின் டிரெய்லர் நாளை மதியம் 1:31 மணிக்கு வெளியாகிறது *‘வாரிசு’ இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளார்.
News March 30, 2026
விவசாயிகளுக்கு ₹31,500 மானியம் வழங்கும் அரசு திட்டம்!

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ₹31,500 வரை மானியம் வழங்கப்படுகிறது. அத்துடன் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சியும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு, குறைந்தது 1 முதல் 5 ஏக்கர் நிலம் இருக்கவேண்டும். இயற்கை விவசாயத்துக்கு மாற விரும்புபவர்கள் <<-1>>pgsindia-ncof.gov.in<<>> இணையதளத்தில் விண்ணப்பித்து மானியத்தை பெறலாம். SHARE.


