News October 5, 2025
தூய்மை பணியாளர்கள் உயிரை துச்சமாக கருதும் DMK: நயினார்

தூய்மைப் பணியாளர்கள் உயிரைத் துச்சமென திமுக அரசு தூக்கியெறிவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார். கார் ரேஸ்ஸூக்கும், விளம்பர நாடகங்களுக்கும் கோடி கோடியாக செலவழிக்கும் திமுக அரசு, ஏழைத் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த சில ஆயிரங்களை செலவு செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News October 5, 2025
முடியை பிடித்து இழுத்து கொடுமைப்படுத்திய இஸ்ரேல்

காசாவிற்கு நிவாரண பொருள்களை கொண்டு சென்ற சமூக ஆர்வலர்களை, இஸ்ரேல் ராணுவம் விலங்குகளை போன்று நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கை, முடியை பிடித்து இழுத்து கொடுமைப்படுத்தியதாகவும், இஸ்ரேல் கொடியை முத்தமிட வைத்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். மொத்தம் 137 சமூக ஆர்வலர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
News October 5, 2025
80S நட்சத்திரங்களின் ரீயூனியன்

1980 மற்றும் 90களில் திரைதுறையை கலக்கிய நடிகர், நடிகைகள் மீண்டும் சென்னையில் ஒன்றிணைந்துள்ளனர். ஸ்ரீபிரியா இல்லத்தில் நடத்த இந்த ரீயூனியனில் சிரஞ்சீவி, சரத்குமார், பிரபு, ஜெயராம், சுபாஷினி, ரேவதி, ரம்யா கிருஷ்ணன், குஷ்பு, நதியா உள்ளிட்ட 31 நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டே நடக்க வேண்டிய இந்த ரீயூனியன் சென்னை வெள்ளத்தால் தள்ளிப்போயுள்ளது. அவர்களின் குரூப் போட்டோ வைரலாகியுள்ளது.
News October 5, 2025
BREAKING: விஜய் முக்கிய உத்தரவு

கரூர் துயர சம்பவத்தையொட்டி கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய விஜய் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். மக்களுக்கு இடையூறாக எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகே, கட்சி நடவடிக்கைகளை தான் தொடர இருப்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளாராம். விரைவில் தவெக மா.செ.,-க்கள் கூட்டமும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.