News April 15, 2024
விமானக் கட்டணம் பலமடங்கு உயர்வு

சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கான விமானக் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. கோடை விடுமுறையில் பொழுது போக்குவதற்கு பலர் வெளியூர்களுக்கு செல்வதாலும், விஸ்தாரா விமான சேவை பாதிக்கப்பட்டிருப்பதாலும், டிக்கெட் விலை அதிகரித்துள்ளது. டெல்லிக்கான கட்டணம் ₹8,000 வரை அதிகரித்துள்ளது. ஸ்ரீநகர், ஜெய்ப்பூருக்கான கட்டணம் ₹10,000-ஐ தாண்டிவிட்டது. மதுரைக்கான கட்டணம் ₹5,000- ₹8,000ஆக உயர்ந்துள்ளது.
Similar News
News November 10, 2025
மகளின் வெற்றி.. அப்பாவுக்கு போலீஸ் வேலை

இந்திய மகளிர் அணி வீராங்கனை கிராந்தி கவுடுக்கு ம.பி. அரசு ₹1 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. அதேபோல், போலீஸ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவரது தந்தை முன்னா சிங்கை, மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது. தேர்தல் பணிகளின் போது தவறு நிகழ்ந்ததாக கடந்த 2012-ல் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தனது அப்பாவை மீண்டும் போலீஸ் உடையில் பார்ப்பதே தனது லட்சியம் என கிராந்தி தெரிவித்து இருந்தார்.
News November 10, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..
News November 10, 2025
மோடியும், அமித்ஷாவும் வாக்கு திருட்டில் சிக்குவார்கள்: ராகுல்

மோடியும், அமித் ஷாவும் ஒருபோதும் நியாமான முறையில் தேர்தலில் வெற்றி பெற்றது இல்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். EC ஆணையருக்கும் வாக்கு திருட்டில் தொடர்புள்ளதாகவும், மோடியும், அமித்ஷாவும் வாக்கு திருட்டு விவகாரத்தில் இருந்து தப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பல மாநிலத்தில் வாக்குதிருட்டின் மூலம் வெற்றிபெற்ற பாஜக, பிஹாரிலும் அதேபோன்று வெற்றி பெற்றுவிடலாம் என நினைப்பதாக கூறினார்.


