News October 5, 2025
இருமல் சிரப் கொடுத்த டாக்டர் கைது

மத்தியபிரதேசத்தில் இருமல் சிரப் குடித்த 11 குழந்தைகள் உயிரிழந்தனர். இதனால், ‘Coldref’, ‘Nextro’ சிரப்கள் தமிழ்நாட்டிலும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த மருந்துகளை பரிந்துரைத்த, டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், Coldref இருமல் சிரப்பை தயாரித்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீசன் மருந்தகம் மீதும் அம்மாநில அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
Similar News
News April 6, 2026
கட்சியில் இருப்பவர்களை விஜய்க்கே தெரியாது: கார்த்தி

புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் நபருக்கு அவர் கட்சியில் யார் இருக்கிறார்கள் என அவருக்கே தெரியாது என்று விஜய்யை கார்த்தி சிதம்பரம் மறைமுகமாக விமர்சித்துள்ளார். அரசியலில் என்ன செய்யப்போகிறோம் என விஜய்க்கு தெரியாது என்ற அவர், ஆனால் வசனம் மட்டும் நன்றாக பேசுவதாகவும் சாடினார். மேலும், இது எல்லாம் வேஸ்ட் எனவும், நிஜ அரசியலும் சினிமாவும் வேறு வேறு என்றும் அவர் பேசினார். <<-se>>#TNElection<<>>
News April 6, 2026
CINEMA 360: இனிமே சிங்கிள் தான்.. ஸ்ருதிஹாசன்!

➤6 முறை காதலித்து காயமடைந்ததால், இப்போதைக்கு சிங்கிளாக இருக்க தீர்மானித்திருப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார் ➤லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ படம் ₹3 நாள்களில் ₹3.07 கோடி வசூலித்துள்ளதாம் ➤மோகன்லால் நடித்து நேரடியாக OTT-ல் வெளியான ‘த்ரிஷ்யம் 2’ படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி தியேட்டரில் ரிலீசாகவுள்ளது ➤தனுஷுடனான நட்பு முறிந்ததை பலவீனமாக பார்ப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
News April 6, 2026
பாஜகவுக்கு முக்கியமான நாள்.. அண்ணாமலை செய்த செயல்

பாஜகவின் 47-வது நிறுவன தினத்தையொட்டி, தனது இல்லத்தில் கட்சியின் கொடியை அண்ணாமலை ஏற்றியுள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், பாஜகவின் புகழ்பெற்ற பயணத்தை வடிவமைக்க உதவியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொடியை ஏற்றியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜகவின் கொடி தொண்டர்களின் வியர்வையையும், கடின உழைப்பையும், தியாகங்களையும் உள்ளடக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


