News October 5, 2025
SC-ல் மேல்முறையீடு செய்த தவெக நிர்வாகிகள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தலைமறைவாக உள்ள N.ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை மதுரை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மனுவை விரைந்து விசாரிக்க கோரி நாளை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவும் உள்ளனர்.
Similar News
News October 5, 2025
நடிகர் அஜித் குமாருக்கு தமிழக அரசு பாராட்டு

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் அணி 3-வது இடம் பிடித்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்ததாக DCM உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் தமிழ்நாட்டை பெருமையடையச் செய்த அஜித்துக்கு வாழ்த்துகள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் ரேஸில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் லோகோவை பயன்படுத்தியதற்கு தமிழக அரசு சார்பில் நன்றி எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.
News October 5, 2025
இனி முடி கொட்டும் கவலை இல்லை.. இத யூஸ் பண்ணுங்க!

லவ் Breakup-ஐ விட, முடி கொட்டுவது தான் ஆண்களின் மனதை பெருமளவில் உடைக்கிறது. ஆனால், இனி அந்த கவலை வேண்டாம். வீட்டிலேயே இந்த மூலிகை ஆயிலை ரெடி செய்து, யூஸ் பண்ணினால் முடி கொட்டும் பிரச்னை தீரும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். தேங்காய் எண்ணெய் & கறிவேப்பிலை இலைகளை சேர்த்து சூடாக்கி, உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யுங்க. இதனை வாரத்திற்கு இருமுறை என 3 வாரங்கள் செய்ய பரிந்துரைக்கின்றனர். SHARE.
News October 5, 2025
மருமகனுக்கு விருந்து வைத்த மாமியார்❤️❤️

தெலங்கானாவில் தசரா கொண்டாட மாமியார் வீட்டிற்கு சென்ற புது மாப்பிள்ளைக்கு 100 வகையான உணவுகளுடன் பிரமாண்ட விருந்து அளிக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு முன்பு சுரேஷ் – சிந்து ஜோடிக்கு திருமணம் நடந்துள்ளது. தசராவிற்கு வீட்டிற்கு அழைத்த பெண்ணின் தாயார், 60 இனிப்பு வகைகளுடன் தடபுடல் விருந்து வைத்து அசத்தியுள்ளார். மேலும், மருமகனுக்கு 1 சவரன் நகையும் பரிசளித்துள்ளார். உங்க மாமியாருக்கு இதை ஷேர் பண்ணுங்க!