News April 15, 2024
சசிகுமார் நடிக்கும் புதிய படம்

கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஃப்ரீடம் ஆகஸ்ட் -14’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
Similar News
News August 19, 2025
குழந்தைக்கு மாத்திரை தரும் போது கவனமா இருங்க!

குழந்தைகளுக்கு மாத்திரை கொடுக்கும் போது, கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சிறு மாத்திரை என்றாலும் அப்படியே கொடுப்பதால் பெரும் இன்னலை சந்திக்க நேரிடலாம். திருத்தணியில் மாத்திரையை அப்படியே முழுங்கியதால், சுவாசக்குழாயில் மாத்திரை சிக்கி, 4 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது. மாத்திரையை பொடியாக்கி, தண்ணீரில் குழைத்துதான் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News August 19, 2025
அதிமுகவுடன் கூட்டணி.. ராமதாஸ் ஆதரவாளர்கள் குரல்

அதிமுக கூட்டணியில் அன்புமணி, திமுக கூட்டணியில் ராமதாஸ் செல்ல வாய்ப்புள்ளதாக பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாஸூக்கு வழங்கியபோதும், பின்னர் நீங்கள் (நிர்வாகிகள்) விரும்பும் கூட்டணியை அமைப்பேன் என்று ராமதாஸ் பேசியபோதும் ‘அதிமுக..அதிமுக..’ என கட்சி நிர்வாகிகள் குரல் எழுப்பினர். இதனால், கூட்டணி கணக்கு மாறுமா என கேள்வி எழுந்துள்ளது.
News August 19, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

காலை 11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விகளுக்கு <<17450987>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. 300 எலும்புகள்
2. மும்பை – தானே வழித்தடத்தில்
3. ஜூன், 1984
4. கே டி ஜாதவ் (1952)
5. பூட்டான்.
நீங்க எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?