News October 5, 2025
பாஜகவின் பி டீம் தேர்தல் ஆணையம்: காங்கிரஸ்

பாஜகவின் உத்தரவின் பேரிலேயே சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டதாக காங்கிரஸ் MP ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். பிஹாரில் ஒரு வீட்டில் 247 வாக்காளர்களின் பெயர் எப்படி வந்தது என ECI விளக்க வேண்டும் எனவும், இறுதி வாக்காளர் பட்டியலில் இவ்வளவு முறைகேடுகள் எப்படி நடந்தது என்றும் அவர் கேட்டுள்ளார். ECI பாஜகவின் பி டீம் போல் செயல்படுவதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News March 25, 2026
மகிழ்ச்சியான மனநிலைக்கு சிறந்த பழக்கங்கள்!

➤விருப்பமான செயலை செய்யும்போது அவசரப்படாமல் ரசித்து செய்யுங்கள். ➤சிறிய தருணங்களை ரசிப்பது. ➤சாகச பயணங்கள் மேற்கொள்ளுங்கள். ➤உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். ➤தினமுன் நன்றாக தூங்குங்கள். ➤தினமும் சிறிதுநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். ➤நண்பர்கள், உறவினர்களுடன் அவ்வப்போது பேசுதல். ➤உங்களுக்கென அதிக நேரத்தை ஒதுக்குங்கள்.
News March 25, 2026
விஜய் விவகாரம்.. சமுத்திரக்கனி விளக்கம்

விஜய் குறித்து பேசியது தொடர்பாக சமுத்திரக்கனி விளக்கம் அளித்துள்ளார். தனக்கு மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியே ஒன்று பேசத் தெரியாது என்று கூறிய அவர், அது ஒரு அக்கறை, வலி மற்றும் என் மனதில் பட்டதாக நான் பார்க்கிறேன் என்றார். மேலும், வீடியோ எடுக்கும்போதே தனக்கு தெரியும் என்றும், வீடியோவுக்கு மானே தேனே போட்டு தம்பிகள் வேற வேலையை பாத்துடாங்க எனவும் தெரிவித்தார்.
News March 25, 2026
சர்தார் வல்லபாய் பொன்மொழிகள்

➤கடின உழைப்பும் தியாகமுமே வெற்றியின் அடித்தளம். அவை இல்லாமல், மிகப்பெரிய கனவுகள் கூட நிறைவேறாமல் போய்விடும். ➤முயற்சியில் காட்டும் நிலைத்தன்மையும் மனவுறுதியும், சாதாரணச் செயல்களை அசாதாரணச் சாதனைகளாக உருமாற்றுகின்றன. ➤நாம் சமத்துவ உணர்வை வளர்த்து, தீண்டாமையை ஒழிக்க வேண்டும். ➤இன்பமும் துன்பமும் காகிதப் பந்துகள் போன்றவை.


