News April 15, 2024
பாண்டியாவின் கேப்டன்சியை விமர்சித்த கவாஸ்கர்

மும்பை கேப்டன் பாண்டியாவின் தலைமைப் பண்பு குறித்து கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். சிஎஸ்கேவுக்கு எதிராக பாண்டியாவின் பந்துவீச்சும், கேப்டன்சியும் அனுபவ வீரரை போல் இல்லை. தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் என பாண்டியாவை அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக சிஎஸ்கேவுக்கு எதிராக 3 ஓவர் பந்துவீசிய பாண்டியா, 43 ரன்களை விட்டுக்கொடுத்தார். குறிப்பாக அவரின் 20ஆவது ஓவரில், தோனி 3 சிக்சர்களை பறக்க விட்டார்.
Similar News
News December 30, 2025
தூக்கிலிடும் வரை ஓயமாட்டேன்: உன்னாவ் பெண்

பாஜக Ex-MLA குல்தீப் சிங் செங்காரின் ஜாமினை நிறுத்தி வைத்த SC-ன் உத்தரவை வரவேற்பதாக <<18701955>>உன்னாவ் பாலியல்<<>> வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இன்று கூட MLA தரப்பில் இருந்து தனக்கு மிரட்டல் வந்ததாகவும், அவரை தூக்கிலிடும் வரை நீதிக்கான தனது போராட்டம் ஓயாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டின் நீதி அமைப்பு மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
ராசி பலன்கள் (30.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 30, 2025
இதுவரை 7.28 லட்சம் மட்டுமே விண்ணப்பம்: ECI

தமிழகத்தில் SIR பணிகளின் மூலம் சுமார் 97 லட்சம் வாக்காளர்களை ECI நீக்கி இருந்தது. ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க TN-ல் இதுவரை சுமார் 7.28 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக ECI தெரிவித்துள்ளது. பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பெயர் சேர்ப்புக்கு படிவம் 6-யும், முகவரி மாற்றத்துக்கு படிவம் 8-யும் பூர்த்தி செய்து தேர்தல் அலுவலரிடம் ஜன. 18-ம் தேதிக்குள் வழங்கலாம்.


