News October 5, 2025

விஜய் முக்கிய முடிவு.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்

image

உச்சநீதிமன்றத்தை அணுக விஜய் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் துயர சம்பவ வழக்கில், விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆளும் அரசு இவ்விவகாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய விஜய், SC-ஐ நாடி, போலீஸ் செய்த தவறுகளை ஆதாரங்களுடன் தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News

News October 5, 2025

மாத மாதம் ₹10,000 பென்ஷன் வேண்டுமா?

image

வயதான பிறகு உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்ஷன் அவசியமாகிறது. இதற்கு ஏதுவாக, மாதம் ₹10,000 வரை பென்ஷன் வழங்குகிறது வய வந்தனா ஓய்வூதியத் திட்டம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். ₹1.5 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை முதலீடு செய்தால், மாதம் ₹1,000 முதல் ₹10,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் <>இங்கே க்ளிக் பண்ணுங்க.<<>> SHARE.

News October 5, 2025

பிரபல தமிழ் எழுத்தாளர் காலமானார்

image

‘குறிஞ்சிசெல்வர்’ என போற்றப்படும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் காலமானார். ‘காட்டுக்குள்ளே இசைவிழா’ எனும் சிறுவர் நூலுக்கு 2012-ல் சாகித்ய அகாடமியின் புரஸ்கார் விருதை பெற்றவர். நாவல், சிறுகதை உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக, அரிய மூலிகைகள், விலங்கு, பறவைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News October 5, 2025

பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல் கட்சிகள்: RN ரவி

image

நாட்டின் பல இடங்களில் சாதிய ஏற்றத்தாழ்வு இருந்தாலும் படித்தவர்கள் அதிகம் கொண்ட தமிழகத்திலும் அது இருப்பது கவலை அளிப்பதாக கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். பிரிவினையை ஏற்படுத்தும் பிரித்தாளும் முயற்சிகளில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், தமிழ்நாடு போராடி வெல்லும் என CM ஸ்டாலின் சொல்வதாக குறிப்பிட்ட அவர், யாருடன் போராடுகிறது என தெரியவில்லை என்றார்.

error: Content is protected !!