News April 15, 2024
BREAKING: சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 98 கிலோமீட்டர் ஆழத்தில் கினியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். இதன் பாதிப்பு குறித்தும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என்பது குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
Similar News
News August 17, 2025
சச்சின் சிறந்த பேட்டர்.. கிரேட் பிளேயர் இல்லை: ஸ்மித்

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு SA-வின் ஜாக் காலிஸ்தான் என பதிலளித்து விவாதத்தை கிளப்பியுள்ளார் AUS வீரர் ஸ்டீவ் ஸ்மித். சச்சின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்தான், ஆல்ரவுண்டராக இருந்தாலும் அவர் பெரும்பாலும் பேட்டிங்கிலேயே கவனம் செலுத்தினார். ஆனால், காலிஸ் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சாதனை படைத்ததால், ஸ்மித் இவ்வாறு தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர்.
News August 17, 2025
தமிழில் ₹1000 கோடி வசூலிக்கும் படங்கள் வராதா?

பிற மொழிகளில் இருந்து தமிழ் சினிமா வித்தியாசமானது என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். பிற மொழி படங்கள் ₹1000 கோடி வசூலிக்கிறது என்றால், மற்ற இயக்குநர்கள் Entertainment மட்டுமே செய்கிறார்கள், ஆனால் தமிழ் இயக்குநர்கள் Educate செய்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். மேலும், ₹1000 கோடி வசூல் என்பது ஏற்கனவே போடப்பட்ட பாதையில் பயணிப்பது, ஷங்கர், மணிரத்னம் போட்டது தனிப்பாதை என்றும் தெரிவித்துள்ளார்.
News August 17, 2025
சின்ன வெங்காயத்தில் இவ்வளவு நன்மைகளா?

*சின்ன வெங்காயத்தில் உள்ள சல்பர், ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. *இன்சுலின் சுரப்பை சீராக்கி, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. *சின்ன வெங்காயம் நார்ச்சத்தின் மூலமாகும்; இது மலச்சிக்கலை தடுத்து, குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்க உதவுகிறது. *சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி வந்தால் முடி உதிர்தல் குறைந்து முடி வளர்ச்சி அதிகரிக்கும். SHARE IT.