News October 5, 2025
Women’s WC: இன்று இந்தியா – பாக்., மோதல்

2025 மகளிர் உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா, பாக்., அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் முதலில் எதிர்கொண்ட இலங்கை அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கொண்டது. அதேநேரம், வங்கதேசம் உடனான போட்டியில் பாக்., 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று இரு முக்கிய அணிகள் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இந்தியா கைகுலுக்கலில் ஈடுபடாது.
Similar News
News October 5, 2025
விஜய்யுடன் இபிஎஸ் கூட்டணி பேச்சு: டிடிவி குற்றச்சாட்டு

கரூர் துயரம் நடந்து ஒருவாரம் கூட ஆகவில்லை; அதற்குள் இச்சம்பவத்தை வைத்து தவெகவுடன் இபிஎஸ் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என்று டிடிவி குற்றம் சாட்டியுள்ளார். தவெகவை கூட்டணிக்குள் கொண்டுவர ஆளுங்கட்சி மீது பழிபோடும் வகையில் இபிஎஸ் பேசுவதாக சாடிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இபிஎஸ் பொறுப்பேற்றாரா என்றும் கேள்வியும் எழுப்பினார்.
News October 5, 2025
தங்கம் வாங்க முடியாதவர்களுக்கு GOOD NEWS

தங்கம் விக்குற விலைக்கு இனி அதை வாங்கவே முடியாது என நினைக்குறீங்களா? வெள்ளியை வாங்க ஆரம்பியுங்கள். தங்கத்தை போலவே வெள்ளியையும் தற்போது உலக நாடுகள் சேமிக்க தொடங்கிவிட்டதால் அதன் விலை ஏறிக்கொண்டே போகிறது. இதனால் இனி வெள்ளிதான் அடுத்த தங்கம் என்றும், வரும்காலத்தில் வெள்ளி முக்கியமான முதலீடாக மாறும் எனவும் நிபுணர்கள் சொல்றாங்க. இன்றைய தேதிக்கு 8 கிராம் வெள்ளியின் விலை ₹1,320-ஆக இருக்கிறது.
News October 5, 2025
இந்தியாவுக்கு வருகிறார் பிரிட்டன் பிரதமர்

2 நாட்கள் அரசுமுறை பயணமாக கெய்ர் ஸ்டார்மர் அக்.8-ம் தேதி இந்தியா வர உள்ளார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து PM மோடியுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், PM மோடியுடன் சேர்ந்து, மும்பையில் நடைபெறும் 6வது Global Fintech Fest விழாவிலும் கலந்துகொண்டு அவர் உரையாற்றவுள்ளார்.