News October 5, 2025
டிராபியை கொடுக்காமல் இருந்ததற்காக தங்க பதக்கம்

ஆசிய கோப்பை டிராபியை, பாக்., அமைச்சரும் ACC தலைவருமான மொஹ்ஷின் நக்வியிடமிருந்து பெற இந்தியா மறுத்தது. இதனால் டிராபியை தன்னுடனே எடுத்துச் சென்ற நக்வி, ACC ஆபீஸீல் வந்து டிராபியை பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருந்தார். இந்நிலையில், டிராபி தொடர்பாக நக்வி எடுத்த நிலைப்பட்டை கெளரவிக்கும் வகையில், அவருக்கு Shaheed Zulfiqar Ali Bhutto Excellence தங்க பதக்கம் வழங்கப்படவுள்ளது.
Similar News
News March 18, 2026
தேர்தல் தேதி மாற்றமா? திடீர் பரபரப்பு

புதுச்சேரி பேரவை தேர்தலை TN-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள ஏப்.23 அன்றே நடத்த கோரி ECI-க்கு புதுவை DMK கடிதம் அனுப்பியுள்ளது. இரு தேர்தல்களும் வெவ்வேறு நாள்களில் உள்ளதால், TN-ல் பணியாற்றும் புதுவையை சேர்ந்தோர் சிரமப்படுவர் என்றும் DMK குறிப்பிட்டுள்ளது. புதுவை பேரவையின் பதவிக்காலம் ஜூன் 15 வரை உள்ளபோதும், முன்கூட்டியே தேர்தல் நடத்துவதிலுள்ள அவசரம் குறித்து விளக்க வேண்டும் என்றும் DMK கேட்டுள்ளது.
News March 18, 2026
விஜய்யை எதிர்த்து ரஜினி ரசிகர் போட்டி

‘எங்கள தொட்டவங்கள நாங்க விட்டதே இல்ல’ என ரஜினி ரசிகர் மன்ற நெல்லை மாவட்ட து.செ., கூறியுள்ளார். தவெக எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் ரஜினி ரசிகர்கள் களமிறங்குவர் என்றார். தற்போது நெல்லையில் போட்டியிட வேட்புமனு வாங்கியுள்ளதாகவும், விஜய் நிற்கும் தொகுதியிலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். ரஜினியிடம் ஆதவ் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
News March 18, 2026
PAN Card விண்ணப்பிக்க போறீங்களா?

ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய PAN Card விண்ணப்பங்களுக்கு ஆதார் மட்டும் போதுமானதாக இருக்காது. விண்ணப்பதாரர்கள் ஆதார் விவரங்களுடன் கூடுதல் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற சான்றுகளை கூடுதலாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஆதார் அட்டையில் உள்ள பெயரே PAN Card-யிலும் அச்சிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


