News October 5, 2025

OTT-யில் இருந்து பாகுபலி படங்கள் நீக்கம்

image

Netflix தளத்திலிருந்து ‘பாகுபலி’ படத்தின் 2 பாகங்களும் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு, அதன் வருடாந்திர உரிமை முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், இவ்விரு பாகங்களையும் சேர்த்து உருவான ‘பாகுபலி எபிக்’ படம் ரிலீஸாகவுள்ளதால், அதற்காக நீக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அக்.31-ல் தியேட்டரில் இப்படம் ரிலீஸாகி ஓடி முடிந்த பின்பு, மீண்டும் 2 பாகங்களும் ஓடிடியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Similar News

News October 5, 2025

Cinema roundup: ‘கும்கி 2’ போஸ்டர்’ வெளியானது

image

*அருள்நிதியின் ‘ராம்போ’ படத்தின் டிரெய்லர் வெளியானது.
*கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் இணைந்து நடித்துள்ள ‘ஆரோமலே’ படத்தின் ‘எப்படி வந்தாயோ’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
*பிரபு சாலமனின் ‘கும்கி – 2’ அறிமுக போஸ்டர் வெளியானது.
*ரஷ்மிகா மந்தனாவின் ‘The Girlfriend’ திரைப்படம் வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. *மும்பையில் நடிகை சமந்தா புதிய வீடு வாங்கியுள்ளார்.

News October 5, 2025

ATM-க்கு 4 இலக்க பின் நம்பர் வந்தது எப்படி தெரியுமா?

image

மேகாலயாவின் ஷில்லாங்கில் பிறந்த ஜான் ஷெப்பர்ட்-பரோன் என்பவரால் 1967-ல் ATM மெஷின் கண்டுபிடிக்கப்பட்டது. முதன்முதலில், பாதுகாப்புக்காக 6 இலக்க PIN-ஐ அவர் பரிந்துரைத்தார். ஆனால், மக்கள் இதனை நியாபகம் வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள் என அவர் பணியாற்றிய வங்கி கூறியிருக்கிறது. இதனால் தான் ATM PIN-க்காக 4 இலக்கங்களை பரிந்துரைத்தார். அதனையே தற்போது வரை உலக வங்கிகள் பின்பற்றி வருகிறது. SHARE.

News October 5, 2025

BREAKING: ரகசியமாக சந்தித்தார் ஆதவ் அர்ஜூனா

image

விஜய்யின் உத்தரவின்பேரில், தவெகவின் ஆதவ் அர்ஜூனா டெல்லியில் காங்.,சை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரை ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமின்கோரி SC-ஐ நாடியுள்ள நிலையில், இச்சந்திப்பு நடந்துள்ளது. மேலும், தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள காங்கிரசை தவெக நாடியுள்ளதாகவும், காங்., முக்கிய தலைவர்களை ஆதவ் சந்திக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!