News October 5, 2025
பெரியார் உலகத்துக்கு திமுக ₹1.5 கோடி நிதி

திருச்சியில் அமையவுள்ள பெரியார் உலகத்துக்கு தனது ஒரு மாத சம்பளத்தை அளிப்பதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய அவர், திமுக MP, MLA-க்களின் ஒரு மாத சம்பளம் சேர்த்து மொத்தம் ₹1.5 கோடியை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதை நன்றியுணர்வோடு அளிப்பதில் திமுகவினர் பெருமை அடைவதாகவும், பெரியார் இருந்தபோதே அவருடைய சிந்தனைகளை செயல்படுத்தியது திமுக என்றும் கூறினார்.
Similar News
News October 5, 2025
தேனி: இரு தரப்பு மோதலில் பஸ் விபத்து

தேனி புதிய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ நிறுவத்துவது தொடர்பாக நேற்று (அக்.4) இருதரப்பு இடையே மோதல் நிலவி வந்தது. இதனால் அப்பகுதி பரபரப்பு நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த 2 தனியார் பஸ்கள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டன. இதில் ஒரு பஸ்ஸின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்தது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்தை சரி செய்தனர்.
News October 5, 2025
தூய்மை பணியாளர்கள் உயிரை துச்சமாக கருதும் DMK: நயினார்

தூய்மைப் பணியாளர்கள் உயிரைத் துச்சமென திமுக அரசு தூக்கியெறிவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார். கார் ரேஸ்ஸூக்கும், விளம்பர நாடகங்களுக்கும் கோடி கோடியாக செலவழிக்கும் திமுக அரசு, ஏழைத் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த சில ஆயிரங்களை செலவு செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 5, 2025
Recipe: செட்டிநாட்டு ஸ்பெஷல் கும்மாயம் செய்யலாம் வாங்க!

*வாணலியில் பச்சரிசி, பாசிப் பருப்பு, உளுந்து ஆகியவற்றை நன்றாக வறுத்து, மாவு பதத்தில் அரைத்து தூளாக்கி கொள்ளவும் *கடாயில் 2 தேக்கரண்டி நெய், வடிகட்டிய வெல்லப் பாகு, பால் ஊற்றி கொதிக்க விடவும் *பின் அடுப்பை சிம்மில் வைத்து, மாவு கலவையை சேர்த்து கிளறவும் *வெந்ததும் முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால் சுவையான செட்டிநாட்டு கும்மாயம் ரெடி. இதனை நண்பர்களுக்கும் பகிரவும்.