News October 5, 2025

பாஜகவின் C டீம் விஜய்: ரகுபதி

image

தமிழகத்தில் பாஜகவுக்கு யாராவது ஆள் கிடைப்பார்களா என்று பார்த்து வருகிறது, ஆனால் அவர்களுக்கு நிச்சயமாக ஆதரவு கிடைக்காது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். விஜய்யை பாஜகவின் C டீம் என குறிப்பிட்ட அவர், அவரை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவுக்கு இல்லை என்று தெரிவித்தார். அத்துடன், யாரையும் அநாவசியமாக கைது செய்ய வேண்டிய எண்ணமும் திமுகவிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News October 5, 2025

சற்றுமுன்: கார் விபத்தில் சிக்கினார் கல்யாணசுந்தரம்

image

அதிமுக செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்தபோது, உளுந்தூர்பேட்டை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சிறு காயங்களோடு கல்யாணசுந்தரம் உயிர் தப்பியுள்ளார். அவருக்கு ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 5, 2025

‘AK 64’ ஸ்பெஷல் அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்

image

குட் பேட் அக்லியை தொடர்ந்து அஜித்தின் ‘AK 64’ படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க உள்ளார். ரேஸிங்கில் பிஸியாக உள்ள அஜித், அதை முடித்துவிட்டு இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளார். இதனிடையே படத்தின் ஸ்பெஷல் அப்டேட்டை ஆதிக் கொடுத்துள்ளார். ‘GBU’ அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட நிலையில், ஃபேமிலி ஆக்‌ஷன் படமான ‘AK 64’ அனைத்து தரப்பு மக்களுக்குமான கதையாக இருக்கும் என ஆதிக் கூறியுள்ளார்.

News October 5, 2025

இருமல் சிரப் கொடுத்த டாக்டர் கைது

image

மத்தியபிரதேசத்தில் இருமல் சிரப் குடித்த 11 குழந்தைகள் உயிரிழந்தனர். இதனால், ‘Coldref’, ‘Nextro’ சிரப்கள் தமிழ்நாட்டிலும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த மருந்துகளை பரிந்துரைத்த, டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், Coldref இருமல் சிரப்பை தயாரித்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீசன் மருந்தகம் மீதும் அம்மாநில அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.

error: Content is protected !!