News October 5, 2025
ரோஸோ லக்ஸம்பர்க் பொன்மொழிகள்

*ஒருவர் செய்யக் கூடிய மிக புரட்சிகரமான விஷயம் என்னவென்றால் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உரக்க எடுத்துரைப்பதுதான்.
*எப்படி கற்பது என்ற பாடத்தை மறக்கவில்லையெனில் நாம் வெற்றியாளர்களே.
*போர் என்பது சீராக, திட்டமிடப்பட்ட பிரம்மாண்ட கொலை.
*புரட்சி நடப்பதற்கு முன் அது சாத்தியமற்றதாகவே கருதப்படுகிறது; நடந்த பிறகு அது தவிர்க்க முடியாததாகப் பார்க்கப்படுகிறது.
Similar News
News October 5, 2025
மூலிகை: சூப்பர் மருத்துவ குணங்களை கொண்ட சுக்கு!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, *சுக்குடன், தனியா சேர்த்து அரைத்து உண்டால், அதிக மதுவால் ஏற்பட்ட போதை குறையும்*சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி போய்விடும் *சுக்குடன், ஒரு வெற்றிலையை சேர்த்து மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும் *சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை ஆகியவற்றில் கஷாயம் செய்து பருகினால், சளி குறையும். SHARE.
News October 5, 2025
மேடையில் எமோஷனலான மோகன்லால்

நான் செல்லும் பாதையில் எனக்கு சந்தேகம் வரும்போதெல்லாம் ரசிகர்களின் ‘லாலேட்டா’ என்ற குரல் தனக்கு வழிகாட்டுவதாக மோகன்லால் கூறியுள்ளார். ’தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற மோகன்லாலுக்கு கேரள அரசு விழா எடுத்தது. அதில் பேசிய அவர், இந்த அங்கீகாரம் தனக்கு மிகவும் முக்கியம் என கூறினார். மேலும், டெல்லியில் விருதை பெறும்போது எனக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ அதைவிட எமோஷனலாக உணர்வதாகவும் தெரிவித்தார்.
News October 5, 2025
ஞாயிற்றுக்கிழமையில் இப்படி பண்ணி பாருங்க…

‘சண்டே வருவதும் தெரியல; போறதும் தெரியல’ என புலம்பாத ஆளில்லை. லீவு நாள் என்பதால், வீட்டு வேலை செய்து, மதியம் சும்மா படுத்து தூங்கி விட்டால், ஒரு நாள் ஒன்றுமே இல்லாமல் போய்விடும். மனசும் துவண்டுவிடும். ஆனால், உங்களின் வேலையை காலையிலேயே வேகமாக முடித்து விட்டு, மதியத்திலிருந்து குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ நேரத்தை செலவிட்டு பாருங்கள். மனதில் மகிழ்ச்சி கூடும். ஒரு நாள் நிறைவாக கடந்ததை உணருவீர்கள்.