News October 5, 2025
பாஜக ஒன்றும் நீதிமன்றம் அல்ல: நயினார் நாகேந்திரன்

மக்களின் வெகுஜன விரோதியாக திமுக மாறியுள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தவெக – பாஜக மறைமுக கூட்டணி உள்ளதாக வெளியாகும் தகவலை மறுத்த அவர், இது திமுகவின் சதி என்றார். மேலும், யாரையும் காப்பாற்ற பாஜக ஒன்றும் நீதிமன்றம் அல்ல என்று விஜய்யின் பின்னால் பாஜக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்தார். சம்பவம் நடந்த அன்று கரூருக்கு இரவோடு இரவாக CM வந்தது எப்படி என கேள்வி எழுப்பினார்.
Similar News
News October 5, 2025
ஞாயிற்றுக்கிழமையில் இப்படி பண்ணி பாருங்க…

‘சண்டே வருவதும் தெரியல; போறதும் தெரியல’ என புலம்பாத ஆளில்லை. லீவு நாள் என்பதால், வீட்டு வேலை செய்து, மதியம் சும்மா படுத்து தூங்கி விட்டால், ஒரு நாள் ஒன்றுமே இல்லாமல் போய்விடும். மனசும் துவண்டுவிடும். ஆனால், உங்களின் வேலையை காலையிலேயே வேகமாக முடித்து விட்டு, மதியத்திலிருந்து குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ நேரத்தை செலவிட்டு பாருங்கள். மனதில் மகிழ்ச்சி கூடும். ஒரு நாள் நிறைவாக கடந்ததை உணருவீர்கள்.
News October 5, 2025
எரியவேண்டியவர்களுக்கு எரியட்டும்: ஸ்டாலின்

எரியவேண்டியவர்களுக்கு எரியட்டும் என்பதற்காகவே திராவிட மாடல் என சொல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் பங்கேற்ற அவர், பிற்போக்குத்தனத்தை புகுத்த நினைப்பதை தடுக்கும் அரண்தான் திராவிட மாடல் என பேசியுள்ளார். மேலும், திமுகவை பிடிக்காது என சிலர் கூறினால், இடஒதுக்கீடு, சமத்துவம், சமூகநீதி பிடிக்காது என்பதுதான் அதன் அர்த்தம் என கூறினார்.
News October 5, 2025
விஜய் முக்கிய முடிவு.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்

உச்சநீதிமன்றத்தை அணுக விஜய் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் துயர சம்பவ வழக்கில், விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆளும் அரசு இவ்விவகாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய விஜய், SC-ஐ நாடி, போலீஸ் செய்த தவறுகளை ஆதாரங்களுடன் தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.